இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்களின் ஒருவர் யோகேஷ்வர் தத். 2012-ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 60 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். அதே பிரிவில் ரஷிய வீரர் பெசிக் குடுகோவ் வெள்ளிப்பதக்கம் பெற்று இருந்தார். ஆனால் இவர் 2013-ம் ஆண்டு ரஷியாவில் நடந்த ஒரு விபத்தில் உயிர் இழந்தார்.
தற்போது ரஷிய வீரர் பெசிக் குடுகோவ் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரது வெள்ளி பதக்கம் பறிக்கப்படுகிறது.
இதனால் அந்த பிரிவில் வெண்கலம் வென்று இருந்த யோகேஷ்வர் தத் வெள்ளிப்பதக்கத்தை பெறுகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சர்வதேச மல்யுத்த சங்கமும், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும் அறிவிக்கும்.
2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் யோகேஷ்வர் தத் 66 கிலோ பிரிவில் பங்கேற்று முதல் சுற்றிலேயே வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Wrestler Yogeshwar Dutt confirms his 2012 London Olympics Bronze medal is upgraded to Silver after Russia’s Besik Kudukhov failed dope test
— ANI (@ANI_news) August 30, 2016
आज सुबह पता चला की मेरा olympic medal upgrade हो कर Silver medal हो गया है। ये मेडल भी देशवासियों को समर्पित हैं pic.twitter.com/S6qxNHW9Po
— Yogeshwar Dutt (@DuttYogi) August 30, 2016