INDvsWI: மாஸ் காட்டும் இந்தியா; 3 ஓவரில் 3 விக்கெட்!

தற்போதைய நிலவரப்படி மேற்கிந்திய தீவுகள் அணி 31.3 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 86 ரன்கள் குவித்துள்ளது. ஹெட்மையர் 10*(23) ரன்களுடன் களத்தில் உள்ளார்!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 12, 2018, 11:49 AM IST
INDvsWI: மாஸ் காட்டும் இந்தியா; 3 ஓவரில் 3 விக்கெட்! title=

11:41 12-10-2018

இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சினை சமாளிக்க மேற்கிந்திய தீவுகள் அணி பெரும்பாடு பட்டு வருகின்றது. துவக்க வீரர்களாக களமிறங்கிய கிரன் பவுள் 22(30), பர்த்வொயிட் 14(68) ரன்களில் வெளியேற பின்னர் களமிறங்கிய ஷாய் ஹோப் 36(68) ரன்களில் வெளியேறினார்.

இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ், அஷ்வின் மற்றும் குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி மேற்கிந்திய தீவுகள் அணி 31.3 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 86 ரன்கள் குவித்துள்ளது. ஹெட்மையர் 10*(23) ரன்களுடன் களத்தில் உள்ளார்!


வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஐதராபாத் டெஸ்டில் இந்திய அணி பவுலிங் செய்கிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. ஏற்கனவே கடந்த ஆகஸ்ட 4-ஆம் நாள் இவ்விரு அணிகள் மோதிய முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கொட் சௌராஸ்ட்ரா கிரிக்கெட் மைதானத்தில் நடைப்பெற்றது. இதில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 2 டெஸ்ட் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

மேற்கிந்திய தீவு மற்றும் இந்தியா மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஹைதராபாத்தில் துவங்க உள்ளது. 

இந்நிலையில், இந்திய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்தியாவின் ஷர்துல் தாகூர் இந்த டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்குகிறார்.

 

இந்திய வீரர்கள் பட்டியல்:-

விராட் கோஹ்லி (கேப்டன்), கே.எல் ராகுல், ப்ர்தீவ் ஷா, சட்டீஸ்வர் புஜாரா, அஜிக்னியா ரஹானே, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஸ்வின், குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், முகமது சிராஜ், ஷர்துல் தாகூர்.

Trending News