"கோலி என்னும் சாதனை நாயகன்" - நீளும் சாதனை பட்டியல்!

டெஸ்ட் போட்டிகளில் வேகமாக 5 ஆயிரம் ரன்களை கடந்த 4-வது இந்திய வீரர் விராட் கோலி எனும் பெயரினையும் அவர் பெற்றுள்ளார்.

Last Updated : Dec 2, 2017, 01:37 PM IST
"கோலி என்னும் சாதனை நாயகன்" - நீளும் சாதனை பட்டியல்! title=

இந்தியா மற்றும் இலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நடைப்பெற்று வருகின்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையடி வருகிறது!

ஆரம்பத்தில் சற்று சறுக்கல்கள்களை இந்திய அணி சந்தித்த போதிலும், பின்னர் சற்று சுதாரித்துக் கொண்ட இந்தியா சற்று நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்றது!

இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களை கடந்த நபர்களின் பட்டியலில் இணைந்து சாதனை படைத்துள்ளார். 

டெஸ்ட் போட்டிகளில் வேகமாக 5 ஆயிரம் ரன்களை கடந்த 4-வது இந்திய வீரர் விராட் கோலி எனும் பெயரினையும் அவர் பெற்றுள்ளார். 

இதுவரை 63 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, தனது 105-வது இன்னிங்சில் 5 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். மேலும் இதே சாதனையினை இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முன்னதாக படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது! 

Trending News