விளையாட்டு செய்திகள்: டி20 உலகக் கோப்பை 2021-க்கு பிறகு இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி (Virat Kohli) இந்த ஆண்டு செப்டம்பரில் அறிவித்தார். அப்போதிருந்து, பல வீரர்களின் பெயர்கள் செய்திகளில் வந்த வண்ணம் உள்ளது. அவர்கள் டி-20 இந்திய அணியின் (Team India) கேப்டன் பொறுப்பை ஏற்பதாக நம்பப்படுகிறது. ஆனாலும் தற்போது வரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதுவரை ரோஹித் சர்மா (Rohit Sharma) மற்றும் ஹர்திக் பாண்டியா (Hardik Pandya) ஆகியோர் கேப்டன் பதவிக்கு போட்டியாளர்களாக கருதப்பட்டனர். ஆனால் இப்போது பேட்ஸ்மேன் கேஎல் ராகுலின் பெயரும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ராகுல் இந்திய அணிக்கு தலைமை தாங்குவார் என கூறப்படுகிறது. உலகக் கோப்பை முடிந்த உடனேயே, நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு வருகை தரும் (New Zealand tour of India, 2021) என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
மூத்த வீரர்களுக்கு ஓய்வு:
ஏஎன்ஐயின் (ANI News) அறிக்கையின்படி, நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் (T20 World Cup) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கலாம். அதே சமயம் கேப்டன் பொறுப்புக்கு ராகுல் தான் முதல் தேர்வு என பிசிசிஐ அதிகாரி ஒருவர் ஏஎன்ஐயிடம் தெரிவித்துள்ளார்.
ALSO READ | இந்திய அணி அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பு உள்ளதா?
மூத்த வீரர்களுக்கு ஓய்வு தேவை. இந்திய டி-20 அணியின் முக்கிய வீரராக ராகுல் உள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். ராகுல் (KL Rahul) அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்கப் போவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ராகுல் கேப்டனாக இருப்பது தெரிந்ததே. அணிக்கு கேப்டனாக இருந்த போது பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டார். ஆனால், அவரது அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பார்வையாளர்கள் மைதானத்திற்கு வர அனுமதி:
இந்தியா-நியூசிலாந்து தொடரில் பார்வையாளர்கள் மைதானத்திற்கு திரும்புவார்கள். இருப்பினும், கொரோனா நெறிமுறையைப் (Corona Protocol) பின்பற்ற வேண்டும். இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி கூறுகையில், "ஆமாம், ரசிகர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் முழு அளவில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதேவேளையில் நாங்கள் போட்டி நடைபெறும் பகுதியின் உள்ளூர் அதிகாரிகளுடன் சேர்ந்து பணியாற்றுவோம் மற்றும் முன்னோக்கி திட்டமிடுவோம்.
ALSO READ | நியூசிலாந்திற்கு எதிரான இந்தியாவின் மோசமான தோல்விக்கான காரணங்கள் என்ன?
இந்தியா - நியூசிலாந்து போட்டி நிலவரம்:
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரின் முதல் போட்டி ஜெய்ப்பூரில் நவம்பர் 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து இரு அணிகளும் நவம்பர் 19 ஆம் தேதி ராஞ்சியிலும், நவம்பர் 20 ஆம் தேதி கொல்கத்தாவிலும் டி20 ஆட்டங்களில் மோதுகின்றன.
டி20 தொடர் தவிர, இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாட உள்ளன. இது நவம்பர் 25 முதல் தொடங்குகிறது.
ALSO READ | இந்திய அணியின் டி 20 கேப்டனாக கேஎல் ராகுலை நியமிக்க வேண்டும் என கோரிக்கை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR