INDvsPAK: கேஎல் ராகுல் ரிட்டன்ஸ், உட்கார வைக்கப்பட்ட ஐயர்

பாகிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 4 சுற்றில் விளையாடும் இந்திய அணியில் கே.எல்.ராகுல் இடம்பெற்றுள்ளார். அவருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் அய்யர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 10, 2023, 03:16 PM IST
  • பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி
  • கே.எல் ராகுல் பிளேயிங் லெவனில்
  • ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் நீக்கம்
INDvsPAK: கேஎல் ராகுல் ரிட்டன்ஸ், உட்கார வைக்கப்பட்ட ஐயர் title=

இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றுப் போட்டி கொழும்புவில் இருக்கும் பரேமதாசா மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் தான் அதிக வெற்றிகளை பெற்றிருந்தாலும், இன்றைய மழை நிலவரத்தைப் பொறுத்து பாகிஸ்தான் அணி இந்த முடிவை எடுத்திருக்கிறது. இந்திய அணியைப் பொறுத்தவரை பிளேயிங் லெவனில் யார் இடம்பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஏனென்றால் காயத்தில் இருந்து குணமடைந்திருக்கும் கே.எல்.ராகுல் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.

மேலும் படிக்க | IND vs PAK: மீண்டும் இந்தியா முதல் பேட்டிங்... பிளேயிங் லெவனில் யார் யார் தெரியுமா?

அவர் கட்டாயம் அணியில் இடம்பெறுவாரா? அல்லது இந்தப் போட்டியில் வெளியே உட்கார வைக்கப்படுவாரா? என்ற கேள்வி இருந்தது. ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தில் இருந்து குணமடைந்து இந்த ஆசிய கோப்பை தொடரில் விளையாடிக் கொண்டிருக்கிறார். அதனால் அவர் அணியில் இருந்து நீக்கப்பட வாய்ப்பில்லை என்று எதிர்பார்க்கப்பட்டது. இஷான் கிஷனின் ஆட்டம் சிறப்பாக இருந்தாலும் அவர் வெளியே உட்கார வைக்கப்படுவார் என்று தான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கேப்டன் ரோகித் சர்மா, சர்பிரைஸ் முடிவாக ஸ்ரேயாஸ் அய்யர் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக கே.எல் ராகுல் சேர்க்கப்பட்டிருக்கிறார். அதனால் இஷான் கிஷனின் இடம் தப்பியது.

ஸ்ரேயாஸ் ஐயர் ஏன் நீக்கப்பட்டார் என்று விசாரிக்கும்போது அவருக்கு முதுகு வலி காரணம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதனால், அவருக்கு பதிலாக களமிறங்கியிருக்கும் கேஎல் ராகுல் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. தொடர்ச்சியாக பார்ம் அவுட்டில் இருந்த ராகுல், திடீரென காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறினார். அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கொடுக்கப்படுவது குறித்தும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. இருப்பினும் இதனை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி, இறுதிச் சுற்று வாய்ப்பை பிரகாசமாக்கும். 

மேலும் படிக்க | INDVsPAK: இந்திய அணிக்கே அதிக சான்ஸ் ! பச்சி சொல்லல டேட்டா சொல்லுது

பிளேயிங் லெவன்

இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ்.

பாகிஸ்தான்: ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக், பாபர் அசாம்(கேப்டன்), முகமது ரிஸ்வான், ஆகா சல்மான், இப்திகார் அகமது, ஷதாப் கான் (துணை கேப்டன்), ஃபஹீம் அஷ்ரஃப், ஷஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவ்ஃப்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News