காவ்யா மாறன் யார்? ஐபிஎல் ஏலத்தில் மிளிர்ந்த ஆட்ட நாயகி..!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் காவ்யா மாறன், ஐபிஎல் ஏலம் நடக்கும்போதெல்லாம் பரபரப்பாக பேசப்படும் நபர். துபாய் ஏலத்திலும் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 19, 2023, 09:03 PM IST
  • யார் இந்த காவ்யா மாறன்?
  • சன்ரைசர்ஸ் உரிமையாளர்
  • காவ்யா யார் என தேடும் நெட்டிசன்கள்
காவ்யா மாறன் யார்? ஐபிஎல் ஏலத்தில் மிளிர்ந்த ஆட்ட நாயகி..! title=

துபாயில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொண்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உரிமையாளர் காவ்யா மாறன் வழக்கம்போல ஏலத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். டிராவிஸ் ஹெட்டை வாங்குவதற்கு சிஎஸ்கே அணி விரும்பிய நிலையில், உடனடியாக ஏலத்தில் போட்டிக்கு குதித்தார். அதுவரை சிஎஸ்கே மட்டுமே டிராவிஸ் ஹெட்டை ஏலத்தில் எடுக்க உரிமை கோரி இருந்தது. போட்டியே இல்லாமல் சிஎஸ்கேவுக்கு கொண்டு வரலாம் என சென்னை சூப்பர் கிங்ஸ் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் காவ்யா மாறன் கையை உயர்த்தி நாங்களும் டிராவிஸ் ஹெட்டை நாங்களும் வாங்குகிறோம் என கூறினார்.

மேலும் படிக்க | சென்னை சூப்பர் கிங்ஸ் 8 கோடி கொடுத்து தூக்கிய சமீர் ரிஸ்வி யார் தெரியுமா?

அப்போது முதல் டிராவிஸ் ஹெட் ஏலம் சூடுபிடிக்க தொடங்கியது. கடைசியில் 6 கோடியே 80 லட்சம் ரூபாய்க்கு அவரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக வாங்கினார் காவ்யா மாறன். அவரின் இந்த அதிரடி என்டிரியில் பலர் யார் காவ்யா மாறன்?, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உரிமையாளர் யார்?, எஸ்ஆர்ஹெச் ஓனர் யார்? என வழக்கம்போல தேட தொடங்கிவிட்டனர். அவர் வேறு யாருமல்ல.. சன் தொலைக்காட்சி குழுமத்தின் அதிபர் கலாநிதி மாறனின் மகள் தான் காவ்யா மாறன்.  இவர் சன் மியூசிக் மற்றும் இதர சன் நிறுவனத்தின் சேனல்களை பார்த்து வருகிறார்.  

காவியா ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பது இது முதல் முறையல்ல. 2018 ஆம் ஆண்டு முதன்முறையாக சன்ரைசர்ஸ் அணிக்காக ஏலத்தில் பங்கேற்றார். அப்போது முதல் அவர் ஐபிஎல் ஏலம் வந்தாலே லைம் லைட்டுக்கு வந்துவிடுவார். ஐபிஎல் போட்டிகள் நடக்கும்போதெல்லாம் சன்ரைசர்ஸ் அணியின் நிலைமைக்கு ஏற்ப அவர் கொடுக்கும் ரியாக்ஷன் சமூக ஊடகங்களில் வைரலாகும். இந்த முறையும் அவர் டிரெண்டாக தவறவில்லை. அத்துடன் இந்த முறையாவது சன்ரைசர்ஸ் அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்பதற்காக பிளேயர்களை தேடி தேடி வாங்கினார். குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸை 20.50 கோடிக்கு வாங்கினார். ஸ்டார்க்கை கொல்கத்தா ஏலம் எடுக்கும் வரை ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு எடுக்கப்பட்ட வீரராக பாட் கம்மின்ஸ் இருந்தார். 

மேலும் படிக்க - IPL Auction: இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News