IPL 2019 தொடரின் 27-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
IPL 2019 தொடரின் 27-வது லீக் ஆட்டம் இன்று மும்பை வாங்காட் மைதானத்தில் நடைப்பெற்றது. ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இப்போட்டியில் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடியது. மும்பை அணி தரப்பில் துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் ஷர்மா 47(32) மற்றும் குவிண்டன் டீ காக் 81(52) ரன்களில் வெளியேற, இவர்களை தொடர்ந்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வெளியேறினர். எனினும் ஹார்திக் பாண்டையா இறுதி வரை ஆட்டமிழக்காமல் 28*(11) ரன்கள் குவித்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் ஆர்ச்சர் 3 விக்கெட் குவித்தார்.
இதனையடுத்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. துவக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை காண்பித்து வந்த வீரர்கள் மும்பை அணியின் வெற்றி கனவை சிதைக்க துவங்கினர். துவக்க வீரர்களாக களமிறங்கிய ரஹானே 37(21), ஜோஸ் பட்லர் 89(43) ரன்கள் குவித்து வெளியேற, இவரை தொடர்ந்து வந்த சன்சு சாம்சன் 31(26) ரன்கள் குவித்து வெளியேறினார். எனினும் இவரது விக்கெட் பின்னர் களமிறங்கிய வீரர்கள் மும்பை இந்தியன்ஸ் வீரர்களின் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சென்றனர்.
இறுதி கட்டத்தை எட்டிய போட்டியில் 6 பந்திற்கு 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைமை ரசிகர்களை நாற்காளியின் முனையில் அமர வைத்தது. 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் ராஜஸ்தான் ஸ்ரேயஸ் கோயல் மற்றும் கிருஷ்ணப்பா கௌதமை கொண்டு அணியின் வெற்றிக்கு போராடியது.
இறுதி ஓவரை ஹார்திக் பாண்டயை வீசினார்...
முதல் பந்தில் 2 ரன்கள், இரண்டாவது பந்தில் 0 ரன்..., மூன்றாவது பந்தில் நான்கு ரன்கள்,...மும்பை அணியின் வெற்றி கனவு முடிந்தது.
ஆட்டத்தின் 19.3-வது பந்தில் ராஜஸ்தான் அணி 188 ரன்கள் குவித்து வெற்றி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் 4 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மும்பை அணி தொடர்ந்து 3-வது இடத்தில் உள்ளது.