SA20 Eliminator, JSK vs PR: ஐபிஎல் தொடரை போன்று தென்னாப்பிரிக்காவில் SA20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த தொடர் பிளே ஆப் கட்டத்தில் உள்ளது. இந்த SA20 தொடரில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப், பிரிட்டோரியா கேப்பிடல்ஸ், பார்ல் ராயல்ஸ், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ், டர்பன்ஸ் சூப்பர் ஜெய்ண்ட்ஸ், எம்ஐ கேப் டவுண் ஆகிய ஆறு அணிகள் மோதின.
இதில் குரூப் சுற்றில் அனைத்து அணிகளும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோசன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்சன்ரைசர்ஸ் ஈஸ்ட்ரன் கேப், டர்பன்ஸ் சூப்பர் ஜெயண்ட்ஸ், பார்ல் ராயல்ஸ், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
ரஷித் கான் தலைமையிலான எம்ஐ கேப் டவுண், வெயின் பார்னல் தலைமையிலான பிரிட்டோரிய கேப்பிடல்ஸ் அணிகள் குரூப் சுற்றிலேயே வெளியேறின. மேலும், முதல் குவாலிஃபயரில் மோதிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப், டர்பன்ஸ் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதிபெற்றது.
மேலும் படிக்க | உலகக் கோப்பை தோல்விக்கு பின் பிரதமர் பேசியது என்ன? - முதல்முறையாக ஷமி சொன்ன சம்பவம்!
அசத்தல் பந்துவீச்சு
அந்த வகையில், புதன்கிழமை நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் டூ பிளேசிஸ் தலைமையிலான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியும், டேவிட் மில்லர் தலைமையிலான பார்ல் ராயல்ஸ் அணியும் மோதின. வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஜேஎஸ்கே பந்துவீச்சை தேர்வு செய்தது.
ஆரம்பம் முதலே ஜேஎஸ்கே பந்துவீச்சாளர்கள் அசத்தலாக பந்துவீசி 18.5 ஓவர்களில் பார்ல் ராயல்ஸ் அணியை ஆல்-அவுட்டாக்கியது. 138 ரன்களை மட்டுமே அந்த அணி எடுத்த நிலையில், கேப்டன் மில்லர் அதிகபட்சமாக 47 ரன்களை சேர்த்தார். ஜேஎஸ்கே பந்துவீச்சு தரப்பில் சாம் குக் 4, பர்கர் 3, இம்ரான் தாஹிர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
டர்பன்ஸ் உடன் இன்று மோதல்
139 ரன்கள் என்ற இலக்கை ஜேஎஸ்கே அணி எளிமையாக சேஸ் செய்தது. 13.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று குவாலிஃபயர் 2 போட்டிக்கு தகுதிபெற்றது. குவாலிஃபயர் 2 போட்டியில் டர்பன்ஸ் சூப்பர் கிங்ஸ் அணியை, ஜேஎஸ்கே அணி இன்று (பிப். 8) எதிர்கொள்கிறது. சில நாள்களுக்கு முன் டர்பன்ஸ் அணியை தோற்கடித்துதான் ஜேஎஸ்கே பிளேஆப் சுற்றுக்கு தகுதிபெற்றது இங்கு நினைவுக்கூரத்தக்கது.
Step by step we move to the next! #PRvJSK #WhistleForJoburg #ToJoburgWeBelong #SA20 pic.twitter.com/XLoxegsoEI
— Joburg Super Kings (@JSKSA20) February 7, 2024
இப்போட்டியில் ஜேஎஸ்கே ஓப்பனர் டூ பிளாய் - டூ பிளேசிஸ் ஓப்பனிங் ஜோடியே 105 ரன்களுக்கு பார்டனர்ஷிப் அமைத்தது. டூ பிளாய் 68 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்த நிலையில், டூ பிளேசிஸ் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும், 4 விக்கெட்டுகளை வீழ்த்திய சாம் குக் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
இறுதிப்போட்டி எப்போது?
SA20 லீக் கடந்தாண்டு முதல் தொடங்கப்பட்டது. முதல் சீசனில் சாம்பியன் பட்டத்தை சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் பெற்றது. இந்தாண்டு நடைபெற்று வரும் இரண்டாம் சீசன் ஜன.10ஆம் தேதி தொடங்கியது. சன்ரைசர்ஸ் ஈஸ்ட்ரன் கேப் அணி இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெறுவோர், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியுடன் வரும் பிப். 10ஆம் தேதி இறுதிப்போட்டியில் மோதும்.
மேலும் படிக்க | உலக கிரிக்கெட்டில் கெத்து காட்டும் பும்ரா... எந்த பௌலரும் செய்யாத சாதனை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ