Virat Kohliயின் சொத்து மதிப்பு உயர்வதற்கு அவருடைய இரட்டை நிலைப்பாடு காரணமா?

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் சொத்து மதிப்பு உயர்வதற்கு அவருடைய இரட்டை நிலைப்பாடு காரணமா? அவர் முதலீடு செய்துள்ள நிறுவனத்துடன் பிசிசிஐ செய்துள்ள ஒப்பந்தம் தொடர்பாக சர்ச்சை வெடித்துள்ளது. 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 6, 2021, 05:55 PM IST
  • விராட் கோலியின் சொத்து மதிப்பு சில ஆண்டுகளில் மிக அதிகமாகிவிட்டது
  • கோலியின் இரட்டை நிலைப்பாட்டினால் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளதா?
  • இந்திய கிரிக்கெட் அணியில் அவருடைய சம்பளம் என்ன தெரியுமா?
Virat Kohliயின் சொத்து மதிப்பு உயர்வதற்கு அவருடைய இரட்டை நிலைப்பாடு காரணமா? title=

புதுடெல்லி: இந்திய கேப்டன் விராட் கோலி சிறந்த பிராண்டாக மாறிவிட்டார். விராட் கோலியின் சாதனைகள் கிரிக்கெட் துறையில் மட்டுமல்ல, அவரது சொத்து மதிப்பும் கடந்த சில ஆண்டுகளில் அபரிதமாக உயர்ந்துள்ளது.  பி.சி.சி.ஐ (BCCI), ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்கள் (sponsorship deals), ஐ.பி.எல் (IPL) மற்றும் அவர் செய்துள்ள பல்வேறு முதலீடுகளிலிருந்து கோஹ்லி பெரும் தொகை சம்பாதிக்கிறார்.

ஃபோர்ப்ஸ் (Forbes) பத்திரிகை அறிவித்த சொத்துப் பட்டியலில், 2019 முதல் விராட் கோலியின் (Virat Kohli) நிகர மதிப்பு ₹ 196 கோடி ஆகும். இந்த காலகட்டத்தில் கோஹ்லியின் ஒட்டுமொத்த நிகர மதிப்பு சுமார் ₹ 900 கோடி என்று கணிக்கப்பட்டுள்ளது. சிறப்பாக விளையாடும் இந்திய வீரராக பி.சி.சி.ஐ. (BCCI) யிடம் இருந்து ஆண்டுக்கு 7 கோடி ரூபாய் கோஹ்லிக்கு வருமானமாக கிடைக்கிறது.

Also Read | Corona இருந்தா என்ன? கோடியில் சம்பாதித்த சாதனையாளர்கள்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bangalore) IPL அணி, விராட் கோலிக்கு ₹ 17 கோடி சம்பளம் கொடுத்தது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அதிக சம்பளம் வாங்கும் கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் என்ற நிலையை அடைந்துவிட்டார் விராட் கோலி. இந்த நிலையில் இந்திய கேப்டன் கோலி இரட்டை ஆதாயம் தேடுவதாக ஒரு குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட்கோலி (Virat Kohli) முதலீடு செய்துள்ள எம்பிஎல் நிறுவனம் (MPL Sports) இந்திய கிரிக்கெட் அணியின் கிட் ஸ்பான்சராக நியமிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

2020 ஜனவரியில் கோஹ்லி எம்.பி.எல் (MPL Sports) நிறுவனத்தின் பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டார்.  இதற்காக விராட் கோலிக்கு 68 சி.சி.டி.கள் (compulsory convertible debenture (CCD)) வழங்கப்பட்டன. ஒவ்வொன்றும் ரூ .48,990 (ரூ. 33.32 லட்சம்) பிரீமியத்தில் வழங்கப்பட்டது. இந்த சி.சி.டி கள் 10 ஆண்டுகளின் முடிவில் பங்குகளாக மாற்றப்படும்.  

Also Read | Coronavirus தடுப்பூசியால் பாதுகாக்கப்படும் முதல் பசிபிக் நாடு எது தெரியுமா?

2020 நவம்பர் 17ஆம் தேதியன்று, எம்.பி.எல் ஸ்போர்ட்ஸை (MPL Sports) இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கிட் ஸ்பான்சர் (Kit Sponsor) மற்றும் உத்தியோகபூர்வ வர்த்தக பங்காளராக அறிவித்தது பி.சி.சி.ஐ. இதன்படி, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்திய அணியின் ஆண்கள், பெண்கள் மற்றும் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிகள் எம்.பி.எல் ஜெர்சிகளை அணிந்து விளையாடும். 

தற்போது ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்திய கிரிக்கெட் அணி (Team India) எம்.பி.எல் ஸ்போர்ட்ஸின் (MPL Sports) ஜெர்சி மற்றும் பிற பொருட்களையும் பயன்படுத்தி வருகிறது.

Also Read | Forbes-ன் சக்தி வாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் நிர்மலா..

இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி ஆதாயம் தரும் வகையில் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள அதே நேரத்தில் அந்த குறிப்பிடா நிறுவனம் ஸ்பான்சராகவும் இருப்பதால் விராட் கோலியின் வர்த்தக நலன் குறித்த சர்ச்சை எழுந்துள்ளது.

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR   

Trending News