இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி இன்று தொடங்குகிறது. இந்த தொடரில் காயம் காரணமாக கடைசி நேரத்தில் கே.எல்.ராகுல் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக கேப்டனாக இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பன்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இர்பான் பதான், ஹர்திக் பாண்டியாவை இந்திய அணியின் கேப்டனாக நியமித்திருக்கலாம் எனக் கூறியுள்ளார்.
ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியா ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார். முதன்முறையாக அந்த அணி ஐபிஎல் போட்டியில் களமிறங்கியபோதும், பாண்டியாவின் சிறப்பான வழிக்காட்டலால் பெரிய அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட அணிகளை கம்பீரமாக வீழ்த்தி இறுதிப்போட்டியில் வாகை சூடி அசத்தியது. கேப்டனாகவும் ஹர்திக் பாண்டியா தன்னை நிரூபித்துக் காட்டினார். இதனால் இந்திய அணிக்கும் நீண்ட நாட்களுக்குப் பிறகு திரும்பியுள்ளார்.
கே.எல்.ராகுல் விலகல்
பாண்டியாவின் வருகையால் இந்திய அணி பலம் பெற்றுள்ள நிலையில், ராகுல் திடீரென தொடரில் இருந்து விலகினார். ஏற்கனவே ரோகித் சர்மா மற்றும் விராட்கோலி, பும்ரா உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டிருக்கும் நிலையில் ராகுலும் விலகியிருப்பது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், இளம் வீரர்கள் தங்களை நிரூபித்துக் காட்ட அருமையான வாய்ப்பும் அவர்களுக்கு கிடைத்துள்ளது.
இர்பான் பதான் கருத்து
ராகுல் விலகலைத் தொடர்ந்து ரிஷப் பன்ட் புதிய கேப்டனாக இந்திய அணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையின் கீழ் இந்திய அணி, தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இர்பான் பதான், தன்னை கேப்டனாக நிரூபித்துக் காட்டியிருக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார். பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என அனைத்து துறைகளிலும் பங்களிப்பு செய்யும் பாண்டியா, ரிஷப் பன்டைவிட திறமை வாய்ந்தவர். அதனால் அவருக்கு கொடுத்திருக்கலாம் எனவும் கூறியுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR