ஈரான் உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியதைக் கொண்டாடிய ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 27 வயதான மெஹ்ரான் சமக் என்ற ரசிகர், காஸ்பியன் கடல் கடற்கரையில் உள்ள பந்தர் அஞ்சலி என்ற நகரத்தில் தனது காரின் ஹார்னை அடித்துக் கொண்டிருந்தபோது, அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. உலகக் கோப்பையில் அமெரிக்காவிடம் தனது கால்பந்து அணி தோல்வியடைந்ததைக் கொண்டாடிய ஈரானிய நபரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதாக உரிமைக் குழுக்கள் புதன்கிழமை தெரிவித்தன.
செவ்வாய்க்கிழமை இரவு கத்தாரில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, ஈரான் இப்போது உலகக்கோப்பை போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது. இந்தத் தோல்வியானது, ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் மக்களால் கொண்டாடப்பட்டது.
அப்படி தனது நாட்டின் தோல்வியைக் கொண்டாடிய 27 வயதான மெஹ்ரான் சமக் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
மேலும் படிக்க | FIFA Qatar: கால்பந்துப் போட்டியில் கத்தாரின் கடுமையான ஆடைக் கட்டுப்பாடுகளை துறந்த மாடல்!
அறநெறிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர் போலீஸ் காவலில் மஹ்சா அமினி மரணமடைந்ததைத் தொடர்ந்து, ஈரான் ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வருகிறது. மக்களின் எதிர்ப்புக்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கும் அரசாங்கத்தின் ஒடுக்குமுறைக்கு பதிலளிக்கும் வகையில் ஈரானியர்கள் பலர், தங்கள் நாட்டு கால்பந்து அணிக்கு ஆதரவளிக்க மறுத்துவிட்டனர்.
”அமெரிக்காவிற்கு எதிரான ஈரான் கால்பந்து அணி தோல்வியைத் தொடர்ந்து சமக் பாதுகாப்புப் படையினரால் நேரடியாக குறிவைக்கப்பட்டு தலையில் சுட்டுக் கொல்லப்பட்டார்..." என்று ஒஸ்லோவை தளமாகக் கொண்ட குழுவான ஈரான் மனித உரிமைகள் (IHR) தெரிவித்துள்ளது.
நியூயார்க்கை தளமாகக் கொண்ட ஈரானில் உள்ள மனித உரிமைகளுக்கான மையம் (CHRI) சமக்கின் மரணத்தை உறுதி செய்துள்ளது. இதுகுறித்து ஈரான் அதிகாரிகள் இதுவரை எதுவும் கூறவில்லை.
இந்த செய்தியை அடுத்து, ஈரானிய சர்வதேச மிட்பீல்டர் சயீத் எசடோலாஹி,கால்பந்து அணியில் இருந்து சமக் உடன் இருக்கும் படத்தை வெளியிட்டார். இறந்தவர் கால்பந்து வீரர் சமக் என்பது தெரிந்ததும், அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.. அவர் அமெரிக்க போட்டியில் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | FIFA திட்டப் பணிகளில் 500 புலம் பெயர்ந்த தொழிலாளிகள் இறந்தனர்: ஒப்புக்கொண்ட கத்தார்
"நேற்று இரவின் கசப்பான தோல்விக்கு பிறகு, உங்கள் மரணச் செய்தி என் இதயத்தில் நெருப்பை ஏற்படுத்தியது," என்று எசடோலாஹி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். சமக் தனது சிறுவயது நண்பர் என்றும், சிறுவயதில் இருந்தே இருவரும் கால்பந்துப் அணியில் இருப்பதாக சயீத் தெரிவித்துள்ளார்.
"ஒரு நாள் முகமூடிகள் விழும், உண்மை அம்பலப்படும்" என்றும், அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார். "இது எங்கள் இளைஞர்களுக்குத் தகுதியானதல்ல, இது நம் தேசத்திற்குத் தகுதியானது அல்ல" என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கால்பந்து வீரர்கள் மீது தேவையற்ற அழுத்தம் கொடுப்பதாக, விரோத சக்திகள் மீது அரசு சார்ந்த ஊடகங்கள் குற்றம் சாட்டின. இங்கிலாந்துக்கு எதிரான முதல் மோதலில், வீரர்கள் தேசிய கீதத்தைப் பாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அதற்கடுத்தப் போட்டிகளில், அதாவது வேல்ஸ் மற்றும் யுஎஸ்ஏ அணிகளுடான போட்டிகளின்போது ஈரானின் தேசிய கீதத்தை வீரர்கள் பாடினார்கள்.
உள்நாட்டில், போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கக்கூடாது என்று ஈரானிய அதிகாரிகள், விளையாட்டு வீரர்களுக்கு கடுமையாக அழுத்தம் கொடுப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. CHRI புதன்கிழமை சமக்கின் இறுதிச் சடங்கிலிருந்து ஒரு வீடியோவை வெளியிட்டது, அதில் துக்கம் கொண்டாடுபவர்கள் "சர்வாதிகாரிக்கு மரணம்" என்று, ஆட்சியாளர்களுக்கு எதிராக கூச்சலிடுவதைக் கேட்க முடிந்தது.
மேலும் படிக்க | சானியா மிர்சா விவாகரத்தை அறிவிக்காதது ஏன் தெரியுமா...?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ