எம்எஸ் தோனி இந்த ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெற்றுவிடுவார் என்கிறது கிரிக்கெட் வட்டாரம். 41 வயதாகும் தோனி, இந்த நடப்பு ஐபிஎல் தொடரில் பேட்டிங் மற்றும் கீப்பிங்கில் சூப்பராக விளையாடிக் கொண்டிருக்கிறார். அதேபோல், அவருடைய கேப்டன்ஷிப் பற்றி சொல்லவே தேவையில்லை. அவரது தலைமையில் ஏற்கனவே 4 ஐபிஎல் கோப்பைகளை வென்றிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இம்முறை இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியும் கண்டு புள்ளிப் பட்டியலில் 3வது இடத்தில் இருக்கிறது.
சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் வெற்றி பெற்ற பிறகு பேசிய தோனி, தான் இப்போது கிரிக்கெட் பயணத்தின் கடைசி கட்டத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதனால் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவரின் இந்த பதில் கிரிக்கெட் ரசிகர்களுக்கும், தோனி வெறியர்களுக்கும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. இன்னும் 2 ஆண்டுகளாவது அவர் விளையாட வேண்டும் என எண்ணிக் கொண்டிருக்கையில் தோனி இவ்வாறு கூறியிருப்பது இந்த ஆண்டுடன் ஓய்வு பெற்றுவிடுவேன் என்பதையே மறைமுகமாக கூறியிருப்பதாக ரசிகர்கள் யூகித்துவிட்டனர்.
ஓய்வு குறித்து தோனியிடம் ஏற்கனவே பலமுறை கேட்டபோது என்னுடைய கடைசி ஐபிஎல் போட்டி சேப்பாக்கத்தில் தான் இருக்கும் என்றும் உணர்ச்சிவசமாக தெரிவித்துள்ளார். அதன்படி, 2 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதனால் நிச்சயம் இந்த முறை சிஎஸ்கே அணி சேப்பாக்கத்தில் கடைசியாக விளையாடும் போட்டிக்கு முன்பு தோனியின் ஓய்வு அறிவிப்பு வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, மே 14 ஆம் தேதி சிஎஸ்கே அணி சேப்பாக்கத்தில் கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது. இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கத்தில் இந்த வருட ஐபிஎல் போட்டியில் விளையாடும் கடைசி போட்டியாகும். குவாலிபையருக்கு தகுதி பெறாவிட்டால், இதுதான் சிஎஸ்கே அணிக்காக சேப்பாக்கத்தில் தோனி விளையாடும் கடைசி போட்டியாக இருக்க வாய்ப்பு உள்ளது.
ஒருவேளை குவாலிபையர் அல்லது எலிமினேட்டர் போட்டிகளுக்கு தகுதி பெற்றால் சிஎஸ்கே அணி இன்னும் இரண்டு போட்டிகளில் சேப்பாக்கத்தில் விளையாட வாய்ப்பு இருக்கிறது. மே 23, மே 24 ஆம் தேதிகளில் சென்னை சேப்பாக்கத்தில் தான் குவாலிபையர் 1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. ஒருவேளை புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்தாலோ அல்லது 3, 4 இடங்களை பிடித்து எலிமினேட்டர்களில் விளையாடினாலோ சிஎஸ்கே சேப்பாக்கத்தில் ஒருமுறை மீண்டும் விளையாட வாய்ப்பு இருக்கிறது. அந்த கணக்கில் பார்க்கும்போது தோனி சேப்பாக்கத்தில் மே 23 அல்லது மே 24 ஆகிய ஏதேனும் ஒரு தேதிகளில் கடைசியாக விளையாடலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ