IPL Memories: ஐபிஎல் தொடர் கடந்த 15 ஆண்டுகளாக கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்படும் தொடராக உள்ளது. தொடர்ந்து, இந்தாண்டு நடைபெறும் ஐபிஎல் 16ஆவது சீசன் மீதும் கடும் எதிர்பார்ப்புகள் உள்ளன. இம்பாக்ட் பிளேயர் விதி, புதிய டாஸ் விதி என இந்தாண்டு ஐபிஎல் தொடரில் பல சர்ப்ரைஸ்கள் காத்திருக்கின்றன. இருப்பினும், கிரிக்கெட் ரசிகர்களுக்கு பழைய ஐபிஎல் போட்டிகளை அசைப்போடுவதிலும் பெரும் ஆர்வமுண்டு.
'My Time With Dhoni'
ரசிகர்களுக்கு மட்டுமின்றி வீரர்களுக்கும், நினைவில் இருந்து அகற்ற முடியாத பல போட்டிகள் குறித்து பல்வேறு சந்தர்ப்பங்களில் பொதுவெளியில் பகிர்ந்துகொள்வார்கள். அந்த வகையில், எந்தவொரு கிரிக்கெட் ரசிகர்களாலும் மறக்க முடியாத, 2010ஆம் ஆண்டில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியை சுரேஷ் ரெய்னா நினைவுக்கூர்ந்து பேசியுள்ளார். ஜியோ சினிமா ஆப்பின் 'My Time with Dhoni' என்ற நிகழ்ச்சியின் புது எபிசோடில், தோனியின் மற்றொரு முகம் குறித்து ரெய்னா தனது நினைவை பகிர்ந்துள்ளார்.
மறக்குமா நெஞ்சம்...
வழக்கமாக, கேப்டன் கூல் என அழைக்கப்படும் தோனி, அந்த பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் மிகவும் வித்தியாசமாக நடந்துகொண்டார். 2010ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனின் 54ஆவது லீக் போட்டி அது. அந்த போட்டியில் வென்றால் மட்டுமே சென்னை அணியால் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியில், ஷான் மார்ஷ் 88 ரன்களையும், இர்பான் பதான் 44 ரன்களையும் எடுத்து, சென்னை அணிக்கு 193 ரன்களை இலக்காக நிர்ணயித்தனர்.
மேலும் படிக்க | IPL 2023: சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு! முக்கிய வீரர் காயம்!
இதையடுத்து, பேட்டிங்குக்கு களமிறங்கிய சென்னை அணியில், சுரேஷ் ரெய்னா 46 ரன்களையும், பத்ரிநாத் 53 ரன்களையும் எடுத்து நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். இருப்பினும், போட்டி கடைசிக்கட்டம் வரை சென்றது. தோனி பத்ரிநாத் உடன் அமைத்த பாட்னர்ஷிப்புக்கு பின், ஆல்பி மார்கல் உடனும் நின்று கடைசி ஓவர் வரை போட்டி கொண்டுவந்து நிறுத்தினார்.
மந்திரமாக மாறிய தோனியின் பெயர்
அந்த போட்டியின் கடைசி போட்டியில், சென்னை அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. இர்பான் பதான் அந்த ஓவரை வீச வர, தோனி ஸ்ட்ரைக்கில் நின்றார். முதல் பந்து, யார்க்கராக வர அதை லாங்-ஆப் திசையில் பவுண்டரி அடித்து மிரட்டினார். அடுத்த பந்தில் இரண்டு ரன்களை எடுக்க, வெற்றிக்கு இன்னும் 10 ரன்கள் வேண்டியதாக இருந்தது. சரியாக அவுட்சைட் ஆப் லைனில், ஸ்லாட்டில் விழுந்த அந்த பந்தை லாங்-ஆன் திசைக்கு தூக்கி அடித்து சிக்ஸராக மாற்றினார்.
போட்டி என்னவோ, பஞ்சாப்பின் ஹோம் கிரவுண்டான ஹிமாச்சல் பிரதேசத்தின் தர்மசாலா மைதானத்தில்தான் நடந்தது. ஆனால், மைதானம் தோனியின் பெயர்தான் மந்திரம் போல் உச்சரிக்கப்பட்டது. எதிரணி வீரர்கள், நிர்வாகம் முதல் தொலைக்காட்சியில் பார்ப்பவர்கள் வரை அத்தனை பேருக்கும் ரத்த அழுத்தம் உச்சத்தில்தான் இருந்திருக்கும்.
தோனியும் வழக்கம்போல் இன்றி, சற்று வித்தியாசமாகவே தென்பட்டார். நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் ஆல்பி மார்க்கலால், இதை அத்தனையையும் வேடிக்கை மட்டும்தான் பார்க்க முடிந்தது. தோனி கண்ணுக்கு அப்போது மைதானத்தில் யாருமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இர்பான் பதான், அவர் கையில் இருக்கும் பந்து மட்டுமே தெரிந்திருக்கும். இர்பான் அந்த நான்காவது பந்திலும், யார்க்கரை மிஸ் செய்தார், தோனி சற்று நகர்ந்து, வைட் லாங்க் ஆன் திசையில் சிக்ஸ் அடித்து மேட்சை முடித்துவைத்து, அரையிறுதிக்கும் சென்னையை தகுதிபெற செய்தார்.
U can't compare anyone with 2010 MS Dhoni .
Man was complete beast , nobody can finish like him.
Absolute monster.
This was 2010 against Punjab@msdhoni #Dhoni #CSK pic.twitter.com/OIkG4NcjnD— Paltan Shashank (@drshashsnk) April 18, 2022
அந்த ஒரு 'பஞ்ச்'
அந்தாண்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. அது ஒருப்புறம் இருக்க, தோனி அந்த பஞ்சாப் போட்டியில் கடைசி சிக்ஸரை அடித்து பின், உச்சக்கட்ட ஆக்ரோஷத்தில் ஆடுகளத்தில் நடந்துகொண்டார். அவரின் ஹெல்மட்டில் தோனி வைத்த அந்த பஞ்ச் இன்றும் பார்த்தாலும், பலருக்கும் மெய்சிலிர்க்கும். அத்தகைய போட்டியைதான் ரெய்னா நினைவுக்கூர்ந்து பேசியுள்ளார்.
"லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸரை அடித்து, அவர் ஹெல்மட்டில் ஒரு குத்துவிட்டார். எந்த போட்டியிலும், எந்தவொரு சூழலிலும் அப்படி அவரை நான் பார்த்தே இல்லை. எல்லாருக்கும் தெரியும் அவர் கேப்டன் கூல் என்று, இருப்பினும், அவர் அன்று காட்டிய என்ர்ஜியின் காரணம் போட்டியின் சூழல்தான்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ