IPL 2023 MS Dhoni: நடப்பு ஐபிஎல் தொடரின் 55ஆவது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்றிரவு (மே 10) மோதியது. நேற்றைய இந்த போட்டியில் பேட்டிங், பந்துவீச்சு என அனைத்திலும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆதிக்கம் செலுத்தி, 27 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை அணி வீழ்த்தியது.
டெல்லி அணியுடனான நேற்றைய போட்டியில் பெற்ற வெற்றியால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் உள்ளது. நல்ல நெட் ரன்ரேட்டை வைத்துள்ளதால், சென்னை அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெறுவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. எனலாம். நடப்பு ஐபிஎல் தொடரில், இதுவரை சென்னை அணி 12 லீக் போட்டிகளில் விளையாடியுள்ளது. 7 போட்டிகளில் வெற்றியும், 4இல் தோல்வியும் அடைந்தது.
ஏறத்தாழ பிளேஆப் சுற்றில்...
லக்னோ அணியுடனான போட்டியில் மழை குறுக்கிட்டதால், போட்டி ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. இன்னும் 2 லீக் போட்டிகள் மட்டுமே உள்ள நிலையில், சென்னை அணி அடுத்த போட்டியையும் சேப்பாக்கத்தில் வைத்து விளையாடுகிறது. அதில் கொல்கத்தா அணியுடன் சிஎஸ்கே மோத இருக்கிறது. தனது கடைசி லீக் போட்டியில் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் வைத்து டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் மீண்டும் மோதுகிறது.
மேலும் படிக்க | மே 14ஆம் தேதி சென்னை - கொல்கத்தா போட்டிக்கான டிக்கெட் விற்பனை விபரம்!
நேற்றைய போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. சிவம் தூபே 25(12), ருதுராஜ் 24(18), அம்பதி ராயுடு 23(17), ஜடேஜா 21(16), ரஹானே 21(20) என அனைவரும் 25 ரன்களுக்குள்ளாகவே ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் களமிறங்கிய தோனியும் 9 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 1 பவுண்டரி என 20 ரன்களை குவிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை எடுத்தது. டெல்லி சார்பில் மிட்செல் மார்ஷ் 3, அக்சர் படேல் 2, குல்தீப் யாதவ், கலீல் அகமது, லலித் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
தோனி என்ட்ரி... எச்சரித்த ஆப்பிள் வாட்ச்
இதில், 17ஆவது ஓவரில் தோனியின் பேட்டிங் செய்ய களமிறங்கிய போது, சேப்பாக்கம் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் பேரொலி எழுப்பிய தங்களின் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர். இதில், சமூக வலைதளத்தில் ரசிகர் ஒருவர், ஆப்பிள் வாட்ச் கொடுத்த அலர்ட்டை பகிர்ந்திருந்தார், இது மிகவும் வைரலானது. அதாவது, தோனியின் என்ட்ரியின்போது மைதானத்தில் எழுந்த ஒலி 100 டெசிபிள் அளவை தாண்டி ஒலித்ததாகவும், இதே சத்தம் இன்னும் சில நிமிடங்களுக்கு நீடித்தால் தற்காலிக காது கேளாமை பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அந்த ஆப்பிள் வாட்ச் எச்சரித்த புகைப்படத்தை அனைவரும் பகிர்ந்து வருகின்றனர்.
Enga thala Dhoni ku periya whistle adinga. pic.twitter.com/pKB2UYnN9f
— Shri (@shrishrishrii) May 10, 2023
தொடர்ந்து ஆடிய டெல்லி அணிக்கு முதல் ஓவரில் இருந்தே சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுக்க தொடங்கிவிட்டனர். பவர்பிளே ஓவர்கள் முடிவதற்குள் டேவிட் வார்னர் 0(2), பில் சால்ட் 17(11), மிட்செல் மார்ஷ் 5(4) என அடுத்தடுத்து வெளியேறினர். இதில், மிட்செல் மார்ஷ் துரதிருஷ்டவசமாக ரன் அவுட்டான நிலையில், மற்ற இருவரும் தீபக் சஹார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.
மேலும் படிக்க | உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இஷான் கிஷன்!
பதிரானா அசத்தல்
அடுத்த சற்று நிலைத்து நின்று விளையாடிய ரிலே ரூசோ - மணீஷ் பாண்டே ஜோடி சுமார் 10 ஓவர்கள் வரை இணைந்து 59 ரன்கலை எடுத்தனர். மணீஷ் பாண்டே 27(29), ரிலே ரூசோ 35(37) என ஆட்டமிழக்க சிஎஸ்கேவின் வெற்றி பாதி முடிவாகிவிட்டது. அக்சர் படேல் ஒருமுனையில் போராடினாலும் அதை ஈடுகட்ட வேறு யாரும் பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை.
ஒருகட்டத்தில் அக்சர் படேல் 21(12), ரிபல் படேல் 10(16) ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரில் மூன்று பவுண்டரிகளை தொடர்ந்து அடித்த லலித் யாதவ் அதன் அடுத்த பந்திலேயே பதிரானா பந்தில் போல்டாகி வெளியேறினார். இதில் டெல்லி அணி 140 ரன்களை மட்டும் எடுத்து 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பதிரானா 3, சஹார் 2, ஜடேஜா 1 விக்கெட்டை வீழ்த்தினர். ஆட்டநாயகனாக ஜடேஜா தேர்வானார்.
Hahah! looks like Dhoni likes to toy around Deepak chahar always#CSKvDC #MSDhoni pic.twitter.com/ifoYHL1a2W
— Gnanashekar (@Gnanashekar) May 10, 2023
செல்லமாக தட்டிய தல
சிஎஸ்கே அணியின் வெற்றி ஒருபுறம் இருக்க போட்டிக்கு முன், தீபக் சஹார் சிஎஸ்கே பந்துவீச்சு பயிற்சியாளரான பிராவோ உடன் பேசிக்கொண்டிருக்கும்போது தோனி அங்கு நடந்துசென்றுகொண்டிருந்தார். அப்போது திடீரென தீபக் சஹார் தலையில் செல்லமாக தட்டிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க | சரும புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் சாம் பில்லிங்ஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ