Krunal Pandya: 49 ரன்னில் அவுட்டாகாமல் வெளியேறிய குருணால் பாண்டியா..! என்ன ஆச்சு?

Krunal Pandya:  மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் பேட்டிங்கில் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த குருணால் பாண்டியா 49 ரன்கள் அடித்திருந்தபோது திடீரென மைதானத்தை விட்டு வெளியேறினார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : May 16, 2023, 10:08 PM IST
  • குருணால் பாண்டியா ரிட்டயர் ஹார்ட்
  • 49 ரன்களில் திடீரென வெளியேறினார்
  • அஸ்வின் ரியாக்ஷனும் விளக்கமும்
Krunal Pandya: 49 ரன்னில் அவுட்டாகாமல் வெளியேறிய குருணால் பாண்டியா..! என்ன ஆச்சு? title=

மும்பை டாஸ் வெற்றி

லக்னோவில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் 63வது ஆட்டத்தில் மோதின. டாஸ் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா பீல்டிங் தேர்வு செய்ய, லக்னோ அணி பேட்டிங் இறங்கியது. அந்த அணிக்கு ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. லக்னோ அணி 12 ரன்கள் இருந்தபோது தீபக் ஹூடா அவுட்டாக, அடுத்து வந்த மண்கன்ட் வந்த வேகத்திலேயே பெஹண்ட்ராப் பந்துவீச்சில் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து டிகாக் பியூஷ் சாவ்லா பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேற, அப்போது லக்னோ அணி 3 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்திருந்தது. 

மேலும் படிக்க | MS Dhoni: புண்படுத்தாதீர்கள் தோனி... முன்னாள் இந்திய வீரர் மன்றாடல்!

சிக்கலில் லக்னோ

கட்டாயம் பார்ட்னர்ஷிப் தேவை என்ற நிலையில் கேப்டன் குருணால் பாண்டியா, மார்கஸ் ஸ்டொயினஸ் உடன் கூட்டணி அமைத்தார். இந்த கூட்டணி சிறப்பாக விளையாடியது. தேவையான பந்துகளை மட்டும் அடித்து ஆட, சீரான வேகத்தில் ரன்களை உயர்த்தினர். குறிப்பாக மார்கஸ் ஸ்டொயினஸ் மெதுமெதுவாக அதிரடி ஆட்டத்தை கையில் எடுக்க, மறுமுனையில் மெதுவாக ஆடிக் கொண்டிருந்த குருணால் பாண்டியா பவுண்டரி அடிக்க சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். 42 பந்துகளில் 49 ரன்கள் எடுத்திருந்த அவர், ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் மட்டுமே விளாசியிருந்தார்.

குருணால் பாண்டியா வெளியேற்றம்

ஓவரும் இறுதிக் கட்டத்தை எட்டியதால் கட்டாயம் அடித்து ஆட வேண்டிய கட்டாயத்தில் லக்னோ அணி இருந்தது. அதனால், ரிட்டையர்ஹார்ட் என்ற முறையில் திடீரென வெளியேறினார் குருணால் பாண்டியா. இன்னும் ஒரு ரன் எடுத்திருந்தால் அரைசதம் அடித்திருக்கலாம். ஆனால், அது குறித்து அவர் துளியும் கவலைப்படாமல், வெளியே செல்வது என முடிவெடுத்து சென்றார். அதன்பிறகு நிக்கோலஸ் பூரன் களத்துக்கு வர, ஸ்டொயினஸ் அதிரடியாக விளையாடினார். 47 பந்துகள் விளையாடிய ஸ்டொயினஸ் 8 சிக்சர்கள், 4 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் எடுத்தார். அவரின் அதிரடியால் 20 ஓவர் முடிவில் லக்னோ அணி 3 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் குவித்தது.

அஸ்வின் ரியாக்ஷன் - விளக்கம்

வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் லக்னோ அணி இப்போட்டியில் களமிறங்கியிருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அந்த அணிக்கான பிளே ஆஃப் வாய்ப்பு என்பது கொஞ்சம் பிரகாசமாகும். இல்லையென்றால் மற்ற அணிகளின் முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டும். இந்த சூழலில், குருணால் பாண்டியா ரிட்டையர் ஹார்ட் ஆனதை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். விளையாட முடியாது என அவர் பொய் சொல்லிவிட்டு களத்தில் வெளியேறியதாக குற்றம்சாட்டியுள்ளனர். 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஆர் அஸ்வினும், இதற்கு தன்னுடைய வியப்பை டிவிட்டரில் பதிவு செய்திருக்கிறார். அதற்கு ரசிகர்கள் குருணால் பாண்டியா பொய் சொல்லிவிட்டு ரிட்டையர் ஹார்ட் ஆகியிருப்பதாக தெரிவித்ததற்கு பதில் அளித்த அஸ்வின், கிரிக்கெட்டில் ரூல்ஸ் அனுமதிப்பதால், அதனை தவறு என சொல்ல முடியாது என்றும் விளக்கம் அளித்துள்ளார். 

மேலும் படிக்க | ரிங்கு சிங்கிற்கு தோனி கொடுத்த 'பரிசு'... அசந்துபோன அதிரடி நாயகன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News