IPL 2023 New Rules: 16ஆவது ஐபிஎல் சீசன் வரும் மார்ச் 31ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. முதல் போட்டியில், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டனஸ் அணியுடன், நான்கு முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுகிறது. இந்த போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் நிலையில், அன்றே தொடக்க விழாவும் நடைபெறும். தொடக்க விழாவின் நிகழ்ச்சி நிரல்கள் இன்னும் வெளியாகாத நிலையில், அதற்கும் அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன.
இந்தாண்டு ஐபிஎல் சீசன் மிகவும் ஸ்பெஷலான ஒன்றாக பார்க்கப்படுகிறது. நீண்ட நாள்களுக்கு பின் இந்தியாவெங்கும் போட்டிகள் நடைபெறுகிறது. மொத்தம் சென்னை, மும்பை, பெங்களூரு என 12 நகரங்களில் போட்டி நடக்கிறது. குறிப்பாக, இதுதான் சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு கடைசி ஐபிஎல் தொடராக பார்க்கப்படுகிறது. எனவே, இந்த ஐபிஎல் தொடர் மீது கிரிக்கெட் ரசிகர்கள் அல்லாத பொது பார்வையாளர்களின் கவனம் குவிந்ததாக சொல்லப்படுகிறது. மேலும், பல போட்டிகளுக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடங்கிவிட்டதாக தெரிகிறது.
மேலும் படிக்க | IND vs AUS: பறிபோகும் சூர்யகுமார் யாதவ் இடம்! அணியில் புதிய மாற்றங்கள்!
இந்நிலையில், இந்த ஐபிஎல் தொடரில் அமலுக்கு வரும் புதிய விதிகள் குறித்த விவரங்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ஐபிஎல் போட்டியில் இந்தாண்டு 'இம்பாக்ட் பிளேயர்' என்ற முறை கடைபிடிக்கப்படும் என கூறப்பட்டது. அதாவது, போட்டியின் எந்த நேரத்திலும், ஒரு வீரரை மற்றொருவருக்கு பதிலாக களமிறக்குவதாகும். இதற்காக, அந்த குறிப்பிட்ட அணியின் கேப்டன் ஐந்து மாற்று வீரர்களை அறிவிக்க வேண்டும் என கூறப்பட்டது.
அந்த வகையில், பிளெயிங் லெவனில் உள்ள வீரர்களின் பட்டியலை டாஸ் போடுவதற்கு முன்பே கேப்டன்கள் போட்டி நடுவர்களிடம் ஒப்படைப்பது வாடிக்கையாகும். ஆனால், இனி பிளேயிங் லெவன் வீரர்களுடன், ஐந்து மாற்று வீரர்களையும் டாஸ் போட்ட பின்னர் அறிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், போட்டி தொடங்குவதற்கு முன்பு வரை அந்த சூழலுக்கு ஏற்ப வீரர்களை தேர்வு செய்யலாம். இது மிக முக்கியமான மாற்றமாக பார்க்கப்படுகிறது. மேலும், பிளேயிங் லெவன் வீரர்களை அறிவித்த பின்னரும், போட்டி ஆரம்பித்த பின்னரும் வீரர்களை எதிரணியின் கேப்டனின் ஒப்புதல் இன்றி மாற்றவே முடியாது.
மற்றொரு விதியாக, பந்தை பேட்டர் அடிப்பதற்கு முன்னர் விக்கெட் கீப்பர் ஏதாவது ஏற்றுக்கொள்ள முடியாத போஷிஷனுக்கு சென்றால், அந்த பந்து செல்லாது என அறிவிக்கப்பட்டு, ஐந்து ரன்கள் போனஸாக அளிக்கப்படும்.
விக்கெட் கீப்பரால் நியாயமற்ற நகர்வு ஏற்பட்டால், நடுவர்களில் ஒருவர் டெத் பந்தைக் கூப்பிட்டு சமிக்ஞை செய்து, அவ்வாறு செய்வதற்கான காரணத்தை மற்ற நடுவருக்குத் தெரிவிக்க வேண்டும். பந்துவீச்சாளரின் பக்கம் இருக்கும் நடுவர் பின்னர், அதை: "பொருந்தினால், வைட் அல்லது நோ பந்திற்கு ஒரு ரன் பெனால்டி வழங்க வேண்டும் அல்லது பேட்டிங் தரப்புக்கு ஐந்து பெனால்டி ரன்களை வழங்க வேண்டும். இந்த செயலுக்கான காரணத்தை பீல்டிங் தரப்பு கேப்டனுக்கு தெரிவிக்க வேண்டும். பேட்டிங் செய்பவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். கூடிய விரைவில், பேட்டிங் அணியின் கேப்டன் என்ன நடந்தது என்பதை தெரிவிக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | IPL 2023: தோனி கோப்பையை வெல்ல மாட்டார்: ஸ்ரீ சாந்த் வந்ததும் சொன்ன அதிரடி கருத்து
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ