இனி பும்ரா தேவையில்லை! இந்திய அணிக்கு கிடைத்த புதிய யார்க்கர் ஸ்பெசலிஸ்ட்!

IPL 2023: ஐபிஎல் 2023ல், பல இளம் வீரர்கள் தங்கள் ஆட்டத்தால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளனர். இதற்கிடையில், பும்ரா போன்ற துல்லியமான யார்க்கர்களை வீசும் ஒரு பந்து வீச்சாளர் டீம் இந்தியாவுக்கு கிடைக்கும் என்று தெரிகிறது.  

Written by - RK Spark | Last Updated : May 22, 2023, 08:40 AM IST
  • பிளே ஆப்பிற்குள் நுழைந்த மும்பை.
  • இரண்டு வருடங்களுக்கு பிறகு நுழைந்துள்ளது.
  • லக்னோ அணியுடன் புதன்கிழமை மோத உள்ளது.
இனி பும்ரா தேவையில்லை! இந்திய அணிக்கு கிடைத்த புதிய யார்க்கர் ஸ்பெசலிஸ்ட்! title=

Team India: ஐபிஎல் 2023 தொடங்கியது முதல், பல இளம் பேட்ஸ்மேன்கள் வருங்கால இந்திய அணிக்கு கைகொடுப்பார்கள் என்ற நம்பிக்கையை அளித்தனர். இதற்கிடையில், ஒரு பந்து வீச்சாளரும் தனது பந்துவீச்சால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். 20 லட்சம் மட்டுமே கொடுத்து எடுக்கப்பட்ட ஆகாஷ் மத்வால் நடப்பு சீசனில் மும்பை அணிக்காக சிறப்பாக பந்து வீசி வருகிறார். இவரின் பந்துகளை பெரிய பேட்ஸ்மேன்கள் புரிந்து கொள்ளத் தவறிவிட்டனர். இதுபோன்ற சூழ்நிலையில், ஆகாஷ் மத்வால் வரும் காலங்களில் இந்திய அணியில் விளையாட ஒரு முக்கிய வீரராக மாறலாம்.

பும்ரா போன்ற யார்க்கர் கிங் இந்தியாவுக்கு மீண்டும் கிடைப்பாரா என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், தற்போது கிடைத்துள்ளார்.  மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மும்பை பந்துவீச்சாளர் ஆகாஷ் மத்வால் அபாரமாக பந்து வீசினார். குறிப்பாக ஹாரி புரூக்கிற்கு அவர் வீசிய யார்க்கர் பந்தில் இருந்தே அவருக்கு பாராட்டுக் காலம் துவங்கியுள்ளது. இந்தப் போட்டியில் மத்வால் 4 ஓவர்களில் 37 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் இன்னிங்ஸின் 19வது ஓவரை வீசிய போது நான்காவது பந்தில் ஹென்ரிச் கிளாசனை கிளீன் போல்டாக்கினார். இதற்குப் பிறகு, அடுத்த பந்திலேயே துல்லியமான யார்க்கரைப் போட்டு ஹாரி புரூக்கின் விக்கெட்டை பிடுங்கினார். அதன் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் படிக்க | IPL 2023: சென்னை அணி அபார வெற்றி - மாஸா...கிளாஸா பிளே ஆஃப்-க்கு தகுதி

இந்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய ஆகாஷ் மத்வால் சமூக வலைதளங்களிலும் பாராட்டுகளைப் பெற்று வருகிறார். சிலர் அவரை வருங்கால நட்சத்திரம் என்றும் சிலர் அவரை ஜஸ்பிரித் பும்ரா போன்ற யார்க்கர் கிங் என்றும் அழைக்கின்றனர். இந்த சீசனில் அவர் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 37 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதே அவரது சிறந்த ஸ்பெல்.  மேலும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், ஆகாஷ் மத்வால், குஜராத்தின் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில்லை நேர்த்தியான பந்து வீச்சில் கிளீன் பவுல்டு செய்தார். சுப்மானுக்கு அந்த பந்து எங்கிருந்து வந்தது என்பது புரியவே இல்லை. அந்த போட்டியில் மத்வால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இனிவரும் காலங்களில் அவரது ஆட்டம் இப்படியே இருந்தால், அவர் டீம் இந்தியாவுக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்று கிரிக்கெட் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.  

இரண்டு வருடங்களுக்கு பிறகு, மும்பை இந்தியன்ஸ் மீண்டும் ஐபிஎல் 2023 பிளேஆஃப்களுக்கு தகுதி பெற்றுள்ளது.  குஜராத் ஜெயண்ட்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகியவை ஏற்கனவே பிளேஆஃப்களுக்குச் சென்றிருந்தன.  இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2 போட்டிகள் முக்கியமானதாக கருதப்பட்டது.  மும்பை, ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் 4வது இடத்திற்கு மும்முனைப் போரில் இருந்தன. இறுதியில் ஐந்து முறை சாம்பியனான மும்பை அந்த இடத்தை பிடித்தது.  குவாலிபயர் 1 போட்டி சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே 23ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

மேலும் படிக்க | 2023 ODI உலகக் கோப்பை போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பிருக்கும் 5 இளம் வீரர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News