IPL 2023: நின்ன மழை மீண்டும் வந்துருச்சு..! ரசிகர்களுக்கு சிஎஸ்கே கொடுத்த அப்டேட்

அகமதாபாத்தில் மழை நின்று மீண்டும் தொடங்கிவிட்டதால் போட்டி நடைபெறுமா? நடைபெறாதா? என்ற கவலை தோய்ந்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நொடிக்கு நொடி அப்டேட் கொடுத்துக் கொண்டிருக்கிறது.  

Written by - S.Karthikeyan | Last Updated : May 28, 2023, 09:17 PM IST
  • மழையால் பாதித்த இறுதிப்போட்டி
  • சென்னை சூப்பர் கிங்ஸ் அப்டேட்
  • மழை நின்றுவிட்டதால் மகிழ்ச்சி
IPL 2023: நின்ன மழை மீண்டும் வந்துருச்சு..! ரசிகர்களுக்கு சிஎஸ்கே கொடுத்த அப்டேட் title=

ஐபிஎல் இறுதிப் போட்டியில் மழை

அகமதாபாத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைடன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெற இருந்தது. ஆனால் வருண பகவான்  குறுக்கிட்டதால் போட்டி நடைபெறும் இப்போது மழையால் நிரம்பி கிடக்கிறது. எப்படியாவது மழை விட்டு போட்டி நடைபெறும் என எதிர்பார்த்திருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு இப்போது வரை ஏமாற்றமே எஞ்சியிருக்கிறது. சில மணி நேரங்கள் மட்டும் இடைவெளி விட்டால்போதும் என வருணபகவானிடம் ரசிகர்கள் வேண்டிக் கொண்டிருக்கையில், திடீரென மழையின் வேகம் குறைந்து நின்றது.

மேலும் படிக்க | CSKvsGT IPL 2023 Final: ஐபில் இறுதிப்போட்டி நடைபெறாவிட்டால் என்ன ஆகும்? ரூல்ஸ் இதுதான்

மீண்டும் தொடங்கிய மழை

அப்படாடா... எப்படியோ டிக்கெட் எடுத்து வந்து மழையில் நனைந்து காத்திருந்ததற்கு பலனாக மழை நின்றுவிட்டது. மெகா இறுதிப் போட்டி இன்னும் சற்று நேரத்தில் நடந்துவிடும் என மகிழ்ச்சியோடு எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு பேரிடியாக வந்தது இடியுடன் கூடிய கனமழை. ஆம், நின்றுபோன மழை அகமதாபாத்தில் மீண்டும் தொடங்கியது. அதே காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கத் தொடங்கியது. மைதானத்தில் விழுந்த ஒவ்வொரு மழைக்கு இடையிலும் போட்டி நடைபெறவில்லையே என்ற ஏக்கத்துடன் காத்திருந்த ரசிகர்களின் கண்ணீர் துளியும் சேர்ந்து கொண்டதால், மைதானத்தில் தண்ணீர் அதிகம் தேங்கத் தொடங்கியது.

சென்னை சூப்பர் கிங்ஸ் கொடுத்த அப்டேட்

ஆனால் மைதான ஊழியர்கள் எதற்கும் தயாராகவே இருந்தனர். கொஞ்சம் நேரம் இடைவெளி கிடைத்தாலும், கிடைக்கும் சில மணி நேரங்களில் மைதானத்தை சுத்தப்படுத்த தயாராக இருந்தனர். அதற்கு ஏற்ப சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகமும் டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடங்களில் அடுத்தடுத்து அப்டேட் கொடுத்தது. மழை நின்றுவிட்டு மீண்டும் தொடங்கியதை ரகுவரன் போட்டோவுடன் சோகத்துடன் பதிவிட்டது. 9.35 மணிக்கு போட்டி நடைபெறும் அடுத்த அப்டேட் கொடுக்கப்படும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது. அந்த அறிவிப்பை ஆவலோடு ரசிகர்கள் எதிர்நோக்கி இருக்கின்றனர். 

மேலும் படிக்க | மாஸ்டர் vs மாணவன்: மீண்டும் சாம்பியனாகுமா சிஎஸ்கே... பைனலில் பந்தயம் அடிக்கும் வீரர்கள் யார் யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News