IPL 2023 GTvsDC: குஜராத் 2வது வெற்றி: பாண்டிங் - கங்குலி இருந்தும் டெல்லி தோல்வி

ஐபிஎல் 2023 ஏழாவது லீக் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் அணி வெற்றி பெற்றது. இதுவரை விளையாடிய இரு போட்டிகளிலும் அந்த அணி வெற்றி பெற்றிருக்கிறது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 4, 2023, 11:52 PM IST
  • 2வது வெற்றியை பெற்ற குஜராத் டைட்டன்ஸ்
  • தமிழக வீரர் சாய் சுதர்சன் அபார ஆட்டம்
  • 61 ரன்கள் விளாசிய சாய் சுதர்சனின் வயது 21
IPL 2023 GTvsDC: குஜராத் 2வது வெற்றி: பாண்டிங் - கங்குலி இருந்தும் டெல்லி தோல்வி title=

ஐபிஎல் 2023 தொடரின் 7வது லீக் போட்டி டெல்லி அருண்ஜேட்லீ மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கை தேர்ந்தெடுக்க, டெல்லி அணி ஓபன்னிங் இறங்கியது. இளம் வீரர் பிரித்திவி ஷா மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் டெல்லி அணியின் பேட்டிங்கை தொடங்கினர். இருவரும் முதல் ஓவரில் இருந்தே தடுமாறிக் கொண்டிருந்தனர். குறிப்பாக வார்னர், முதல் ஓவரை வீசிய முகமது ஷமியின் பந்தை எதிர்கொள்ள பெரும்பாடு பட்டார். அந்த ஓவரில் ஒரு பந்து ஸ்டம்பை தாக்கியபோதும் பெயில்ஸ் விழாததால் அவுட்டில் இருந்து தப்பித்தார்.

மேலும் படிக்க | IPL 2023: வார்னருக்கு அதிர்ஷ்டம்..பந்து பட்டும் விழாத ஸ்டம்ப்..! ஷமிக்கு ஷாக்

அவர் விக்கெட் கிடைக்கவில்லை என்றால் என்ன? அடுத்து ஷான் மார்ஷ் விக்கெட்டை கைப்பற்றி டெல்லி அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் வந்த வீரர்களில் அதிகபட்சமாக ஷர்ப்ஃராஸ் கான் 30 ரன்களும் இன்று அறிமுகமான அபிஷேக் போரல் 20 ரன்களும்  மற்றும் அக்சர் பட்டேல் 36 ரன்களும்  எடுத்தனர்.  இதனால், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி. பின்னர், 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டி அசத்தியது . அதிகபட்சமாக தமிழக வீரரான சாய் சுதர்ஷன் 61 ரன்கள் எடுத்தார். 

6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற குஜராத் அணி, இந்த தொடரில் தொடர்ச்சியாக பெற்ற 2வது வெற்றியாகும். முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோற்கடித்திருந்தது. டெல்லி அணியைப் பொறுத்தவரை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திர கேப்டன் ரிக்கி பாண்டிங் பயிற்சியாளராக இருக்கிறார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி டைரக்டராக இருக்கிறார். இவர்கள் இரண்டு பேரும் இருந்தும் கூட டெல்லி அணியால் வெற்றிப் பாதைக்கு திரும்ப முடியவில்லை. 

இதற்கு முக்கிய காரணம் டெல்லி அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விரைவிலேயே விக்கெட் பறிகொடுப்பது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கிறது. இதனை சரிசெய்தால் மட்டுமே அடுத்த போட்டியில் அந்த அணியால் வெற்றிப் பாதைக்கு திரும்ப முடியும். 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் ஆசிஷ் நெக்ரா ஆகியோர் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர். 

மேலும் படிக்க | IPL 2023: டெல்லி மற்றும் குஜராத் போட்டியை எப்போது, ​​எங்கே, எப்படி இலவசமாக பார்ப்பது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News