Virat Kholi: ஓவரா ஆட்டம் போட்டு கடுப்பேற்றிய விராட் கோலி - கை கொடுக்காமல் தவிர்த்த கங்குலி

டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின் முடிவில் கங்குலி, விராட் கோலிக்கு கை கொடுக்காமல் சென்ற வீடியோ இப்போது வைரலாகியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 16, 2023, 11:36 AM IST
Virat Kholi: ஓவரா ஆட்டம் போட்டு கடுப்பேற்றிய விராட் கோலி - கை கொடுக்காமல் தவிர்த்த கங்குலி title=

ஐபிஎல் 2023 தொடரின் 20வது லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. சிறப்பாக விளையாடிய ஆர்சிபி அணி வெற்றி பெற்ற நிலையில், போட்டியின் முடிவில் இரு அணி வீரர்களும் கைக்குலுக்கி கொள்ளும்போது விராட் கோலியிடம் கைக்குலுக்குவதை சவுரவ் கங்குலி தவிர்த்துவிட்டார். இந்த வீடியோ இப்போது வைரலாகியுள்ளது. பிசிசிஐ தலைவராக இருந்தபோதே கங்குலிக்கும் விராட் கோலிக்கும் செட் ஆகவில்லை. இதனால், இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து அதிரடியாக விராட் கோலி நீக்கப்பட்டார். இதற்கு முழு காரணம் கங்குலி தான் என்ற பேச்சு அடிப்பட்டது. அந்த பிரச்சனை இன்னும் இருவருக்கும் இடையே சமரசமாகவில்லை. அதன் வெளிப்பாட்டை டெல்லி - பெங்களூரு போட்டியின்போதும் கங்குலி மற்றும் விராட் முகத்தில் பார்க்க முடிந்தது.

மேலும் படிக்க | IPL 2023: பினிஷ் செய்த ஷாருக்கான் - பரபரப்பான போட்டியில் பட்டையை கிழப்பிய பஞ்சாப்!

முதலில் பேட்டிங் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. விராட் கோலி அதிரடியாக விளையாடி 50 ரன்கள் எடுத்தார். அதன்பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணி மீண்டும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஏற்கனவே 4 போட்டிகளில் தோல்வியடைந்திருக்கும் அந்த அணி இப்போட்டியிலாவது வெற்றிக் கணக்கை தொடங்கலாம் என்ற முனைப்புடன் இருந்தது. ஆனால், அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மீண்டும் சொதப்பியதால் 175 ரன்கள் என்ற வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை. பிரித்திவி ஷா, மார்ஷ், யாஷ் துல் ஆகியோர் மிக மிக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.  

மணீஷ் பாண்டே மட்டும் பொறுப்பாக ஆடி 50 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் வேகமாக பெவிலியனுக்கு செல்வதிலேயே குறியாக இருந்தனர். அக்சர் படேல் அதிரடியாக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் 21 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். இதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியிடம் தோல்வியை தழுவியது டெல்லி கேப்பிட்டல்ஸ். டெல்லி அணி இந்த தொடரில் பெற்ற 5வது தோல்வியாகும். மேலும், ஒரு வெற்றியை கூட பதிவு செய்யாத ஒரே அணியாகவும் இருக்கிறது டெல்லி. இதுவரை 5 போட்டிகளில் விளையாடி, ஐந்திலும் தோல்வியை தழுவியிருக்கிறது. 

போட்டியின்போதே டெல்லி அணி அமர்ந்திருக்கும் பகுதியில் பீல்டிங் செய்ய சென்ற விராட் கோலி சவுரவ் கங்குலியை முறைத்து பார்த்தார். இந்த புகைப்படம் அப்போதே சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் பரஸ்பரம் கைக்குலுக்கிக் கொண்டனர். அப்போது விராட் கோலி கெத்தாக பாண்டிங்கிடம் பேசிக் கொண்டு கங்குலியை கண்டு கொள்ளாததுபோல் இருந்தார். இதனை உணர்ந்த கங்குலி விராட் கோலிக்கு கை கொடுக்காமல் தவிர்த்துவிட்டு மற்ற வீரர்களுடன் கைக்குலுக்கிவிட்டு சென்றார். இந்த வீடியோ இப்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

மேலும் படிக்க | IPL 2023: யார்க்கர் இல்லாமல் பந்துவீசுவார் ப்ரீத்தி ஜிந்தா - கலாய்த்த குஜராத் வீரர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News