சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் அம்பதி ராயுடு, ஐபிஎல் 2023 இறுதிப்போட்டிக்குப் பிறகு ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை இது குறித்து தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் அறிவித்தார். அதில், அகமதாபாத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடும் ஐபிஎல் 2023 இறுதிப் போட்டி சிஎஸ்கே அணிக்காக நான் ஆடும் கடைசி ஆட்டமாக இருக்கும். இந்த முறை சத்தியமாக என்னுடைய முடிவில் "யு-டர்ன்" இருக்காது என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு, இதேபோல் ஒரு அறிவிப்பை வெளியிட்டார் அம்பத்தி ராயுடு. அதில், ஐபிஎல் 2022 போட்டியில் தனது கடைசி சீசன் என்று கூறியிருந்தார். சிஎஸ்கே நிர்வாகத்தின் தலையீட்டிற்குப் பிறகு அவர் அதை நீக்கினார். ராயுடு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு முடிவு அறிவிப்பதும், பின்னர் திரும்பப்பெறுவதும் முதல் முறை அல்ல. 2019 ஆம் ஆண்டில், ஒருநாள் உலகக் கோப்பைக்கான அணியில் தேர்ந்தெடுக்கப்படாததால் அதிருப்தி அடைந்த அவர், உடனடியாக அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
உள்ளூர் மற்றும் சர்வதேச, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாகவும் அம்பத்தி ராயுடு தெரிவித்திருந்தார். பின்னர் அதிருப்தியில் எடுக்கப்பட்ட முடிவை திரும்ப பெற்றார். ராயுடு 2010 முதல் 2017 வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். பின்னர் 2018 முதல் CSK அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறினார். இந்த ஆண்டு, அவர் பெரும்பாலும் CSK-க்கு இம்பாக்ட் பிளேயராகவே விளையாடினார். இருப்பினும், அவருக்கு இந்த சீசன் சிறப்பானதாக இருக்கவில்லை. 11 இன்னிங்ஸ்களில், 132.38 ஸ்ட்ரைக் ரேட்டில் 139 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
— (@RayuduAmbati) May 28, 2023
குறிப்பிடத்தகுந்த ஆட்டம் என்றால், சென்னையில் நடந்த குவாலிஃபையர் 1ல் கடினமான சூழ்நிலையில் அவர் ஒன்பது பந்துகளில் 17 ரன்கள் எடுத்து சிஎஸ்கேயை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் செல்ல உதவினார். ராயுடுவை பொறுத்தவரை முதல் பத்து அனுபவம் வாய்ந்த ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களில் ஒருவராவார். மேலும், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே ஆகிய அணிகளுக்காக விளையாடி ஐந்து முறை சாம்பியன் பட்டங்களை வென்றிருக்கிறார். இந்த லிஸ்டில் முதல் இடத்தில் இருக்கும் ரோகித் சர்மாவுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார். சென்னை அணி குஜராத் அணிக்கு எதிராக சாம்பியன் பட்டம் வென்றால், 6 முறை கோப்பைகள் வென்ற அணியில் இருந்த ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்வார்.
ராயுடு 2013, 2015 மற்றும் 2017 ஐபிஎல் பட்டங்களை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்தார். பின்னர் 2018 மற்றும் 2021 ஐபிஎல் பட்டங்களை வென்ற சிஎஸ்கே அணியிலும் இடம்பிடித்தார். ராயுடு இந்திய கிரிக்கெட் லீக் உடனான தொடர்பு காரணமாக போட்டியின் முதல் இரண்டு வருடங்களை தவறவிட்டார். இதுவரை 203 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி இருக்கும் அவர், 22 அரை சதங்கள் மற்றும் ஒரு சதத்துடன் 4329 ரன்கள் எடுத்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ