ஐபிஎல் 2024: யாருப்பா அந்த 5 விக்கெட் கீப்பர்? அனைவரின் பார்வையும் அவர்கள் மீது தான்..

IPL 2024 Best Wicketkeeper: ஆரம்பமானது ஐபிஎல் திருவிழா. அனைத்து கிரிக்கெட் ரசிகர்களின் பார்வைவும் தங்களுக்கு பிடித்த வீரர்கள் மீது உள்ளது. அந்தவகையில் இந்தமுறை ஐபிஎல் சீசனில் விளையாடும் ஐந்து விக்கெட் கீப்பர் மீது அனைவரின் கவனமும் உள்ளது. அவர்களை குறித்து பார்ப்போம்.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 20, 2024, 03:31 PM IST
  • ஐபிஎல் 2024: எப்போது, எங்க, எப்படி இலவசமாக பார்ப்பது
  • ஐபிஎல் 2024 போட்டி அட்டவணை: தேதி, நேரம், இடம், அணிகள்
  • ஐபிஎல் 2024: அனைத்து வீரர்களின் பட்டியல்
ஐபிஎல் 2024: யாருப்பா அந்த 5 விக்கெட் கீப்பர்? அனைவரின் பார்வையும் அவர்கள் மீது தான்.. title=

IPL Latest News: இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) அணியின் கேப்டன் ரிஷப் பந்த் இந்த சீசனில் களம் இறங்க உள்ளார். சாலை விபத்தில் சிக்கிய அவரால் கடந்த சீசன் முழுவதும் விளையாட முடியவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. இந்த ஐபிஎல் சீசனில் ஐந்து விக்கெட் கீப்பர் மீது அனைவரின் பார்வையும் உள்ளது. அவரிகளின் செயல்திறன் எப்படி இருக்கப்போகிறது என கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். அப்படிப்பட்ட 5 விக்கெட் கீப்பர்களின் ஐபிஎல் புள்ளி விவரங்களைப் பற்றி பார்ப்போம்.

ரிஷப் பந்த்

இவர் மிடில் ஓவர்களில் அதிரடியாக ரன்களை குவிப்பதில் பெயர் பெற்றவர். தற்போது வரை விக்கெட்டுக்கு பின்னால் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதுவரை, அவர் ஐபிஎல் தொடரில் 98 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் அவர் 34.61 சராசரி மற்றும் 147.97 ஸ்ட்ரைக் ரேட் கொண்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் 15 முறை ஆட்டமிழக்காமல் களத்தில் கடைசி வரை நின்றுள்ளார். ஐபிஎல் போட்டியை பொறுத்த வரை அவர், 2,838 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 15 அரை சதங்கள் மற்றும் 1 சதம் அடங்கும்.  இவர் விக்கெட் கீப்பராக 64 கேட்சுகள் மற்றும் 18 முறை ஸ்டம்பிங் செய்துள்ளார்.

சஞ்சு சாம்சன்

இந்த ஐபிஎல் சீசன் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) கேப்டனும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான சஞ்சு சாம்சனுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். ஐபிஎல் முடிந்தவுடன் டி20 உலகக் கோப்பையும் நடைபெற உள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியில் தனது இருப்பை தக்க வைத்துக்கொள்ள நினைப்பார். இதுவரை, அவர் 152 ஐபிஎல் போட்டிகளில் 137.91 ஸ்ட்ரைக் ரேட்டில் 3,888 ரன்கள் எடுத்துள்ளார். அவர் 3 சதங்கள் மற்றும் 20 அரை சதங்கள் அடித்துள்ளார். ஐபிஎல் போட்டியில் விக்கெட் கீப்பராக 76 கேட்சுகள் மற்றும் 15 ஸ்டம்பிங் செய்துள்ளார்.

மேலும் படிக்க - Mumbai Indians: சூர்யகுமார் யாதவிற்கு மாற்று? - இந்த 2 பேருக்கு அதிக வாய்ப்பு - ஏன் தெரியுமா?

கேஎல் ராகுல்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) கேப்டன் கேஎல் ராகுல் காயத்தில் இருந்து மீண்டு ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு வருவதால், டி20 கிரிக்கெட் பார்மேட்டில் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் ராகுல் உள்ளார். அத்தகைய சூழ்நிலையில், அவரிடமிருந்து ஒரு நல்ல செயல்திறன் எதிர் பார்க்கப்படுகிறது. கேஎல் ராகுலை பொறுத்த வரை இதுவரை 118 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த காலகட்டத்தில், அவர் 4 சதங்கள் மற்றும் 33 அரை சதங்களின் உதவியுடன் 4,163 ரன்கள் எடுத்துள்ளார். அதேநேரத்தில் விக்கெட் கீப்பராக 61 கேட்சுகள் மற்றும் 5 முறை ஸ்டம்பிங் செய்துள்ளார்.

இஷான் கிஷன்

கடந்த சில காலமாக சர்ச்சையில் சிக்கிய மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் இஷான் கிஷான் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடாததால் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். அத்தகைய சூழ்நிலையில், அவர் இந்த சீசனில் என்ன விலை கொடுத்தாவது சிறப்பாக விளையாட வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார். இதுவரை, அவர் ஐபிஎல்லில் 91 போட்டிகளில் விளையாடியுள்ளார். 134.26 ஸ்ட்ரைக் ரேட்டில் 2,324 ரன்கள் எடுத்துள்ளார். அதே நேரத்தில் 6 முறை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்துள்ளார். இவர் விக்கெட் கீப்பராக 42 கேட்சுகள் மற்றும் 5 முறை ஸ்டம்பிங் செய்துள்ளார்.

மேலும் படிக்க - ஐபிஎல் 2024க்கான புதிய கேப்டனை அறிவித்துள்ள டெல்லி கேபிடல்ஸ்!

ஜிதேஷ் சர்மா

பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) அணியின் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா கடந்த சில ஐபிஎல் சீசன்களில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஐபிஎல்லில் சிறப்பாக செயல்பட்டதால் இந்திய அணியிலும் இடம் பிடித்தார். இவர் இதுவரை 26 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த காலகட்டத்தில், அவர் மூன்று முறை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 159.24 ஸ்ட்ரைக் ரேட்டில் 543 ரன்கள் எடுத்துள்ளார்.  அவரது சிறந்த ஸ்கோர் 49 ரன்கள். அவர் விக்கெட் கீப்பராக 12 கேட்சுகள் மற்றும் 4 முறை ஸ்டம்பிங் செய்துள்ளார்.

ஐபிஎல் 2024 சீசனின் முதல் போட்டி எப்பொழுது?

இந்தியன் பிரீமியர் லீக் 2024 சீசனின் முதல் போட்டி மார்ச் 22 அன்று நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடையே நடக்கவுள்ளது. அதுவும் எம்.எஸ். தோனியின் தலைமையிலான அணி சொந்த மைதானத்தில் சென்னையில் முதல் போட்டியை விளையாடவுள்ளது. 

மேலும் படிக்க - IPL 2024: சென்னை அணியில் இணைந்த இரண்டு முக்கிய வீரர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News