ஐ.பி.எல் ஒளிபரப்பு- டிவி உரிமத்துக்கு முட்டிமோதும் 3 நிறுவனங்கள்

ஐ.பி.எல் ஒளிபரப்பு உரிமையைப் பெறுவதற்கு இப்போதே 3 நிறுவனங்களிடையே கடும் போட்டி ஏற்படத் தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Written by - S.Karthikeyan | Edited by - Vijaya Lakshmi | Last Updated : Nov 20, 2021, 03:08 PM IST
ஐ.பி.எல் ஒளிபரப்பு- டிவி உரிமத்துக்கு முட்டிமோதும் 3 நிறுவனங்கள் title=

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. இந்திய வீரர்களுடன், வெளிநாடுகளைச் சேர்ந்த பிரபல நட்சத்திர வீரர்களும் கலந்து கொண்டு விளையாடுவதால், உலகளவில் மிகப்பெரிய கிரிக்கெட் லீக் தொடராக உள்ளது. 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடருக்கான மவுசு ஆண்டுக்கு ஆண்டு பன்மடங்கு எகிறிக் கொண்டே செல்கிறது. விளம்பரம், ஸ்பான்சர் மூலம் வருவாய் கொட்டுவதால், முன்னணி நிறுவனங்களும் ஐ.பி.எல்லை விளம்பர மீடியமாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.

வீரர்களுக்கும் கோடிகளில் பணம் கிடைப்பதால், ஐ.பி.எல் (Indian Premier League) விளையாடுவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். இதில், வீரர்கள் அணியும் ஷூ, உடை, கையில் அணியும் பேண்ட் என அனைத்திலும் தங்களது நிறுவனத்தை விளம்பரப்படுத்த நிறுவனங்கள் போட்டி போடுகின்றனர். இதனால் ஐ.பி.எல் ஒளிபரப்பு உரிமம் பெறும் நிறுவனத்துக்கு வருவாய் பல லட்சம் கோடி ரூபாய் கிடைக்கிறது. முதல் ஆண்டில் ஐ.பி.எல் ஒளிபரப்பு உரிமையை சோனி நிறுவனம் 460 கோடி ரூபாய்க்கு பெற்றது. அந்த ஆண்டில் ஐ.பி.எல்லுக்கு கிடைத்த வரவேற்பை பார்த்த மற்ற நிறுவனங்கள், அடுத்த ஆண்டுக்கான ஒளிபரப்பு உரிம ஏலத்தில் குதித்தன. இருந்தாலும் 2009 ஆம் ஆண்டும் சோனி நிறுவனம் 900 கோடி ரூபாய் கொடுத்து ஒளிபரப்பு உரிமையை தக்க வைத்தது.

ALSO READ | நான் தோனியை சிறந்த பேட்ஸ்மேனாக பார்த்ததில்லை - ஹர்திக் பாண்டியா!

ஆனால், இடைவிடாது முயற்சி செய்த ஸ்டார்ஸ்போர்ஸ் (Star Sports) நிறுவனம் மிகப்பெரிய தொகையை கொடுத்து ஒளிபரப்பு உரிமையை வாங்கியது. கடந்த ஆண்டுகளாக ஐ.பி.எல் ஒளிபரப்பு உரிமையை வைத்திருக்கும் அந்த நிறுவனம், 16,347.50 கோடி ரூபயாயைக் கொடுத்து இந்த ஏலத்தை தன்வசப்படுத்தியது. இந்த உரிமத்துக்கான காலம் அடுத்த ஆண்டுடன் முடிவடைகிறது. அடுத்த 5 ஆண்டுக்கான ஒளிபரப்பு உரிமத்துக்கான ஏலம் அடுத்த ஆண்டில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஏலத்தை இப்போது இருந்தே பல்வேறு பெரிய நிறுவனங்கள் கைப்பற்ற முடிவு செய்துள்ளன.

அடுத்த ஏலத்தின் மதிப்பு சுமார் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் கோடி ரூபாய் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அமேசான், பேஸ்புக் நிறுவனங்கள் கூட ஏலத்தில் பங்கேற்கலாம் எனக் கூறப்பட்டாலும், ஜீ மற்றும் சோனி குழுமம், ஸ்டார்ஸ்போர்ட்ஸ் இந்தியா மற்றும் விரைவில் புதிய சேனல் ஒன்றை தொடங்க உள்ள ஜியோ குழுமம் ஆகிய 3 நிறுவனங்கள் முன்னணியில் இருக்கின்றன. எப்படியாவது ஒளிபரப்பு உரிமத்தை பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்புடன் இந்த நிறுவனங்கள், இப்போதே அதற்கான யுக்திகளை தொடங்கியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஆண்டுக்கு ஆண்டு ஐ.பி.எல்லின் விளம்பர சந்தை மதிப்பு கூடிக்கொண்டே செல்வதால், ஒளிபரப்பு உரிமையை பெறுவதன் மூலம் பல லட்சம் கோடிகளை வருவாய் ஈட்டலாம் என்பது அந்த நிறுவனங்களின் கணிப்பாக உள்ளது. 

மேலும், 2 புதிய அணிகள் அடுத்த ஆண்டு ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்க இருப்பதால் போட்டிகளின் எண்ணிக்கையும் உயர வாய்ப்புள்ளது. இதனால், விளம்பரங்கள் கூடுதலாக இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதனை குறி வைத்தே மூன்று பெரிய நிறுவனங்களும் காய்களை நகர்த்தி வருகின்றன. இதனால், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் வீரர்களின் ஏலத்தைப் போலவே ஐ.பி.எல் ஒளிபரப்பு உரிம ஏலமும் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ALSO READ |  மீண்டும் ஃபார்முக்கு வந்த ஹர்திக் பாண்டியா, கதிகலங்கும் நியூசிலாந்து

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News