ஐபிஎல் 2022 மெகா ஏலம் பெங்களுருவில் நடைபெறுகிறது. 2 கோடி ரூபாய் அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்ட வீரர்களுக்கான பட்டியலில் இடம்பெற்றிருந்த டேவிட் வார்னர், ஏலத்துக்கு வந்தவுடன், டெல்லி அணி அவரை வாங்க விருப்பம் தெரிவித்தது. பஞ்சாப் உள்ளிட்ட அணிகளும் விருப்பம் தெரிவித்த நிலையில், டெல்லி அணி விடாப்படியாக வார்னரை ஏலம் எடுப்பதில் தீவிரம் காட்டியது. முடிவில் 6.25 கோடி ரூபாய்க்கு வார்னரை ஏலம் எடுத்தது டெல்லி கேப்பிட்டல் அணி.
மேலும் படிக்க | ஃபாஃப் டு பிளெசிஸை எடுத்த ஆர்.சி.பி! ஏலத்தில் விட்டுக்கொடுத்த சி.எஸ்.கே!
2009 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் முதன் முதலாக டெல்லி அணியில் விளையாடினார் டேவிட் வார்னர். 5 ஆண்டுகள் விளையாடிய அவர், 2014 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கேப்டனாக சென்றார். 2016 ஆம் ஆண்டு வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணி முதன்முறையாக கோப்பையை வென்று அசத்தியது. ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக ஹைதராபாத் அணிக்கும், டேவிட் வார்னருக்கும் இடையேயான உறவு சுமூகமாக இல்லை. கேப்டன் பதவியில் இருந்து விலக்கபட்டதால் அதிருப்தியில் இருந்த அவர், அந்த அணியில் இருந்தும் விடைபெறுவதாக அறிவித்தார்.
மேலும், ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க இருப்பதாகவும் தெரிவித்தார். அப்போது முதல் அவர் டெல்லி அணிக்கு செல்ல அதிகம் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. காரணம், டெல்லி அணியின் பயிற்சியாளராக இருக்கும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், வார்னரை டெல்லி அணிக்கு கொண்டு வர வேண்டும் என விரும்புவதாக, அந்த அணியின் இணை பயிற்சியாளராக இருக்கும் முகமது கைஃப் தெரிவித்திருந்தார். அவரது கூறியது போலவே டெல்லி அணியால் ஏலம் எடுக்கப்பட்டிருக்கிறார் டேவிட் வார்னர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
மேலும் படிக்க | மும்பை இண்டியன்ஸ் Target செய்யப்போகும் வீரர்கள்
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR