தினேஷ் கார்த்திக்கின் அதிரடியில் ஆர்சிபி அபார வெற்றி!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றுள்ளது.

Written by - RK Spark | Last Updated : Apr 6, 2022, 12:04 AM IST
  • இரண்டு போட்டிகளிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றிருந்தது.
  • டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.
  • விராட் கோலி துரதிஸ்டவசமாக 5 ரன்களில் ரன் அவுட்டானார்.
தினேஷ் கார்த்திக்கின் அதிரடியில் ஆர்சிபி அபார வெற்றி! title=

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இன்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.  இதற்கு முன் நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றிருந்தது, அதே வெற்றியை இந்த போட்டியிலும் தொடர விளையாடியது. டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. 

 

மேலும் படிக்க | மீண்டும் இந்திய அணியில் எம்.எஸ்.தோனி?

முதல் இன்னிங்சில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல் அணிக்கு முதல் விக்கெட் உடனடியாக விழுந்தாலும் இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜோஸ் பட்லர் மற்றும் படிக்கல் சரமாரியாக விளையாடினார். படிக்கல் 29 பந்துகளில் 37 ரன்களும், ஜோஸ் பட்லர் 47 பந்துகளில் 70 ரன்கள் விளாசினார்.  கேப்டன் சாம்சங் 8 ரன்களில் வெளியேற, கடைசியாக இறங்கிய ஹெட்மையர் 31 பந்துகளில் 42 ரன்களை அடித்தார்.  20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 169 ரன்களை எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ்.

 

அடுத்து களமிறங்கிய ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணிக்கு ஓபனிங் பார்ட்னர்ஷிப் சிறப்பாக அமைந்தது. டு பிளெஸ்ஸிஸ் 29 ரன்களும், ராவத் 26 ரன்களும் அடித்தனர்.  அதன் பிறகு களமிறங்கிய விராட் கோலி துரதிஸ்டவசமாக 5 ரன்களில் ரன் அவுட்டானார். அதன்பிறகு வந்த டேவிட் வில்லி மற்றும் ரூதர்ஃபோர்ட் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வெளியேற போட்டி ராஜஸ்தான் பக்கம் சென்றது.  பின்பு ஜோடி சேர்ந்த ஷாபாஸ் மற்றும் தினேஷ் கார்த்திக் கூட்டணி ராஜஸ்தான் பவுலர்களை வெளுத்து வாங்கியது.  

இவர்கள் இருவரும் இணைந்து போட்டியை தங்கள் பக்கம் மாற்றினர். ஷாபாஸ் 26 பந்துகளில் 45 ரன்களும், தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 44 ரன்கள் விளாச 19.1 ஓவரில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்றது.  புள்ளிப் பட்டியலில் ராயல் சேலஞ்சர்ஸ் 6வது இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலிடத்திலும் உள்ளது.

 

மேலும் படிக்க | IPL2022: சென்னை - மும்பையை வெளியேற்றி ஐபிஎல் பைனலுக்கு போகப்போகும் அணி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News