IPL 2021 PBKS vs RR: இன்றைய ஐபிஎல் போரில் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் நேருக்கு நேர்

ஆர்ஆர் vs பிபிகேஎஸ்:  ஐபில்எல் 2021 புள்ளி பட்டியலில் (IPL 2021 Points Table) ராஜஸ்தான் அணி 6வது இடத்திலும், பஞ்சாப் அணி 7வது இடத்திலும் உள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 21, 2021, 05:34 PM IST
  • ராஜஸ்தான் அணி 6வது இடத்திலும், பஞ்சாப் அணி 7வது இடத்திலும்.
  • ராஜஸ்தான் பஞ்சாப் இடையேயான போட்டி இரவு 7:30 மணி முதல் தொடங்கும்.
  • இன்று ஐபிஎல் 14 வது சீசனின் 32 வது போட்டி பஞ்சாப், ராஜஸ்தான் இடையே நடைபெறுகிறது.
IPL 2021 PBKS vs RR: இன்றைய ஐபிஎல் போரில் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் நேருக்கு நேர் title=

ஆர்ஆர் vs பிபிகேஎஸ்: இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2021 தொடரின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாவது போட்டி மற்றும் நடப்பாண்டு ஐபில்எல் தொடரின் போட்டியின் 32 வது போட்டி இன்று (செப்டம்பர் 21) நடைபெற உள்ளது. இந்த போட்டி குறித்து கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் சில கேள்விகள் இருக்கும். போட்டியின் நேரம் என்ன? டாஸ் எப்போது போடப்படும்? நேரடி ஒளிபரப்பை எப்படிப் பார்ப்பது? இதுபோன்ற பல கேள்விகளுக்கான பதில்களை உங்களுக்கு கீழே வழங்கியுள்ளோம். அதற்கு முன் இரு அணிகளையும் பற்றி தெரிந்துக்கொள்ளுவோம். 

நடிகை ப்ரீத்தி ஜிந்தாவுக்குச் சொந்தமான பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) கடைசியாக ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொண்டபோது, ​​இரு அணிகளுக்கும் பரபரப்பான ஆட்டமாக இருந்தது. இன்றைய போட்டியிலும் இதே போன்ற ஒரே ஆட்டத்தை கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். நடப்பாண்டு ஐபில்எல் தொடரின் முதல் பாதி இரு அணிகளுக்கும் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை.

பஞ்சாப் கிங்ஸ் இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 5 ல் தோல்வியடைந்துள்ளது. அந்த அணி 6 புள்ளிகளை பெற்றுள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ் 7 போட்டிகளில் நான்கில் தோல்வியடைந்துள்ளது. இந்த அணியும் 6 புள்ளிகளை பெற்றுள்ளது. ஐபில்எல் 2021 புள்ளி பட்டியலில் (IPL 2021 Points Table) ராஜஸ்தான் அணி 6வது இடத்திலும், பஞ்சாப் அணி 7வது இடத்திலும் உள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) மைதானத்தில் மோதும் இரு அணிகளும் முதல் போட்டியில் இருந்தே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்களில் தங்களுக்கான இடத்தை தக்கவைக்க முயற்சியில் இருக்கும்.

ALSO READ | IPL 2021: வருணின் சுழலில் சுருண்ட ஆர்சிபி!

பஞ்சாப் அணி ஐதன் மார்க்ரம், நாதன் எல்லிஸ் மற்றும் அடில் ரஷித் ஆகியோரை தங்கள் அணியில் சேர்த்துள்ளது. கிறிஸ் கெய்ல் பேட்டிங் பஞ்சாப் அணிக்கு பக்கபலமாக இருக்கும். ராகுல் தலைமையிலான அணி முதல் நான்கு இடங்களுக்குச் செல்ல முழுமுயற்சியில் ஈடுபட்டு உள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals) ஜோஃப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் போன்ற வெளிநாடு நட்சத்திர வீரர்கள் அணியில் இடம் பெறாததால் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது இருப்பினும், இதமுறை எவின் லூயிஸ், ஓஷேன் தாமஸ் மற்றும் தபாரிஸ் ஷம்ஸி ஆகியோரைச் சேர்த்து சிறந்த அணியை அமைத்துள்ளனர்.

இந்த சீசனில் கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் மட்டுமே தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டனர். பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற விரும்பினால், ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் அனைவரும் சிறப்பாக செயல்படவேண்டியிருக்கும்.

ALSO READ | கேப்டன் பதவியிலிருந்து விலகிய கோலி; RCB ரசிகர்கள் அதிர்ச்சி

இன்று ஐபிஎல் 14 வது சீசனின் 32 வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது.

இரு அணிகளும் துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் (Dubai International Cricket Stadium) பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான  டாஸ் இரவு 7:00 மணிக்கு நடைபெறும்.

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இடையேயான போட்டி இரவு 7:30 மணி முதல் தொடங்கும்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல் மற்றும் ஹாட்ஸ்டார் ஓடிடி (OTT) தளத்தில் நேரடி ஸ்ட்ரீமிங்கை பார்க்கலாம்.

ALSO READ | IPL 2021: ருத்ராஜின் ருத்ரதாண்டவத்தால் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News