IPL 2020: சென்னை - ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்...முழு விவரம் உள்ளே!!

செவ்வாயன்று ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் மூன்று முறை வெற்றியாளர்களான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) உடன் இணைந்த ராஜஸ்தான் ராயல்ஸ், இந்திய பிரீமியர் லீக்கின் (IPL) 13 வது சீசனில் தங்கள் ஆட்டத்தை ஒரு நேர்மறையான குறிப்பில் தொடங்கும். 

Last Updated : Sep 22, 2020, 06:34 PM IST
    1. ராஜஸ்தான் ராயல்ஸ் Vs சென்னை சூப்பர் கிங்ஸ், ட்ரீம் 11 அணி கணிப்பு
    2. நடப்பு இந்திய பிரீமியர் லீக்கின் (IPL) தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியின் தொடக்க வீரர்கள் வாட்சன் , விஜய்யை தவிர மற்ற அனைவருமே சிறப்பாக ஆடினர்.
    3. 13வது ஐபிஎல் தொடரின் , 4வது லீக் ஆட்டத்தில், 3 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 1 முறை சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
IPL 2020: சென்னை - ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்...முழு விவரம் உள்ளே!! title=

செவ்வாயன்று ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் மூன்று முறை வெற்றியாளர்களான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) உடன் இணைந்த ராஜஸ்தான் ராயல்ஸ், இந்திய பிரீமியர் லீக்கின் (IPL) 13 வது சீசனில் தங்கள் ஆட்டத்தை ஒரு நேர்மறையான குறிப்பில் தொடங்கும். 

மகேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni) சனிக்கிழமையன்று நடப்பு சாம்பியன்களையும் நான்கு முறை வென்ற மும்பை இந்தியன்ஸையும் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐபிஎல் 2020 ஆட்டத்திற்கு சரியான தொடக்கத்தை அளித்தார்.

 

ALSO READ | WATCH: சிக்ஸர் அடித்து விளாசும் தோனி.... CSK வெளியிட்ட WOW வீடியோ..!

13வது ஐபிஎல் தொடரின் , 4வது லீக் ஆட்டத்தில், 3 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 1 முறை சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 21 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் சென்னை அணி 14 முறையும் , ராஜஸ்தான் அணி 7 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த ஆண்டு இவ்விரு அணிகள் மோதிய இரண்டு போட்டிகளிலும் சென்னை அணியே வாகை சூடி உள்ளது.

நடப்பு இந்திய பிரீமியர் லீக்கின் (IPL) தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியின் தொடக்க வீரர்கள் வாட்சன் , விஜய்யை தவிர மற்ற அனைவருமே சிறப்பாக ஆடினர். தோனி, அனுபவம் மிக்க வீரர்களை எப்போதும் அதிகம் நம்புவதால், அணியில் மாற்றம் எதுவும் இருக்காது என தெரிகிறது. அதேநேரம், ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணி,  தங்கள் முதல் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. பட்லர், ஸ்டோக்ஸ் இல்லாத சூழலில் ஸ்மித், ஜோஃப்ரா ஆர்ச்சர், டேவிட் மில்லர் ஆகியோரையே ராஜஸ்தான் அதிகம் நம்பி இருக்கிறது. 

இதற்கிடையில், இந்த போட்டியில் முதலில் ராஜஸ்தான் அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் விளையாடுவது சந்தேகமாக இருந்தது. காரணம் இவருக்கு தலையில் ஏற்பட்ட காயம். ஆனால் கடைசி நேரத்தில் நேற்று ஸ்டீவ் ஸ்மித் தனது பிட்னஸை நிரூபித்தார். நேற்று பயிற்சியின் போதே இவர் பிட்னஸை நிரூபித்தார்.

பயிற்சியின் போது சிக்-சாக் ஓட்டத்தில் இவர் ஈடுப்பட்டார். பொதுவாக உடல் தகுதியை நிரூபிக்க இந்த ஓட்டம் அவசியம். இதை ஸ்டீவ் ஸ்மித் மேற்கொண்ட காரணத்தால், இன்று கண்டிப்பாக இவர் விளையாடுவார் என்று உறுதியாகி உள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் Vs சென்னை சூப்பர் கிங்ஸ், ட்ரீம் 11 அணி கணிப்பு

விக்கெட் கீப்பர்: எம்.எஸ்.தோனி
பேட்ஸ்மேன்கள்: அம்பதி ராயுடு, ஃபாஃப் டு பிளெசிஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ராபின் உத்தப்பா
ஆல்ரவுண்டர்கள்: சாம் குர்ரன், ரவீந்திர ஜடேஜா
பந்து வீச்சாளர்கள்: ஜோஃப்ரா ஆர்ச்சர், லுங்கி என்ஜிடி, தீபக் சாஹர், பியூஷ் சாவ்லா

 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

ALSO  READ | சச்சின், விராட் கோலி ஐ விட தல தோனி மிகவும் பிரபலமானவர்: முன்னாள் கிரிக்கெட் வீரர்

Trending News