IPL 2019: 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 164  ரன்கள் எடுத்து ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

Last Updated : Apr 3, 2019, 08:05 AM IST
IPL 2019: 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி title=

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 164  ரன்கள் எடுத்து ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

8 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. பெங்களூரு அணியின் விராட் கோலி, பர்திவ் படேல் ஆகியோர் முதலில் களம் இறங்கினர். 6 ஓவர் முடிவில் 48 ரன்கள் எடுத்திருந்தனர்.  அணி 55 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கோலி ஆட்டமிழந்தார். பின்னர் படேலுடன் வில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். பர்திவ் படேல் 14வது ஓவரில் (29 பந்துகளில்) அரை சதம் எடுத்தார்.

ஆட்டத்தின் முடிவில் பெங்களூரு அணி 20 ஒவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களை எடுத்து, ராஜஸ்தான் அணிக்கு 159 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. 

பின்னர் ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய அஜிங்க்யா, ஜோஸ் பட்லர் ஆகியோர் 7 ஓவரில் 59 ரன்கள் எடுத்து அதிரடியாக விளையாடினர். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் இறுதியில் 19.4 ஓவரில் 158 ரன்கள் எடுத்து சமனில் இருந்தது. 
19.5 ஓவரில், 3 விக்கெட் இழப்பிற்கு 164  ரன்கள் எடுத்து ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. 

Trending News