வெளியேறியது SRH; இறுதி போட்டிக்கான பந்தையத்தில் CSK & DC!

IPL 2019 தொடரின் எலிமினேட்டர் போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தி டெல்லி அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது!

Last Updated : May 8, 2019, 11:35 PM IST
வெளியேறியது SRH; இறுதி போட்டிக்கான பந்தையத்தில் CSK & DC! title=

IPL 2019 தொடரின் எலிமினேட்டர் போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தி டெல்லி அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது!

IPL 2019 தொடரின் எலிமினேட்டர் போட்டி இன்று விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைப்பெற்றது. இப்போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின.

முன்னதாக IPL 2019 தொடரின் இறுதி போட்டிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன் அணி தகுதி பெற்றுள்ள நிலையில், இன்று இவ்விரு அணிகளுக்கும் இடையே எலிமினேட்டர் போட்டி நடைப்பெற்றது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை விட்டு வெளியேறும், வெற்றி பெறும் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் குவாளிப்பையர்-2 போட்டியில் விளையாடும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்றைய போட்டி பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடியது. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அண நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் குவித்தது. அணியில் அதிகப்பட்சமாக மார்டின் குப்டில் 36(19) ரன்கள் குவித்தார். மனிஷ் பாண்டே 30(36) ரன்கள் குவித்தார். டெல்லி அணி தரப்பில் கீமோ பவுள் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதனைத்தொடர்ந்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. துவக்க வீரராக களமிறங்கிய பிரத்திவி ஷா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 56(38) ரன்கள் குவித்தார். இவருக்கு துணையாக ரிசாப் பன்ட் 49(21) ரன்கள் குவித்தார். இவர்களை தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து வெளியேற சற்று தடுமாறி வெற்றி இலக்கை டெல்லி அணி ஆட்டத்தின் 19.5-வது பந்தில் எட்டியது. ஒரு பந்து மீதமிருக்க 8 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் குவித்த டெல்லி அணி குவாளிப்பையர்-2 போட்டிக்கு முன்னேறியது. 

இன்றைய போட்டியில் வெற்றி பெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி வரும் மே 10-ஆம் நாள் விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைப்பெறும் குவாளிப்பையர்-2 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News