ஐபிஎல் 2017: பெங்களூரு - குஜராத் அணிகள் இன்று மோதல்

Last Updated : Apr 27, 2017, 11:59 AM IST
ஐபிஎல் 2017: பெங்களூரு - குஜராத் அணிகள் இன்று மோதல் title=

10-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன. 

ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் - விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 8 ஆட்டத்தில் ஆடி 2 வெற்றி, 5 தோல்வியுடன் 5 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் இருக்கிறது. 

பெங்களூருவில் நேற்று முன்தினம் நடக்க இருந்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. அதற்கு முந்தைய லீக் ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக பெங்களூரு அணி 49 ரன்னில் சுருண்டு மோசமான தோல்வியை சந்தித்தது.

குஜராத் லயன்ஸ் அணி 7 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி, 5 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது. 

இரு அணிகள் இடையிலான முந்தைய லீக் ஆட்டத்தில் குஜராத் அணி சொந்த மண்ணில் 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க முயற்சிக்கும். இரு அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களின் ஆட்டமும் எடுபட்டால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் குஜராத் லயன்ஸ் அணி மோதுகிறது. 

Trending News