ஐபிஎல் 2017: 97 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி

Last Updated : Apr 12, 2017, 10:23 AM IST
ஐபிஎல் 2017: 97 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி title=

10வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 5-ம் தேதி தொடங்கி மே 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.

இந்த நிலையில் புனேயில் நேற்று  இரவு 8 மணிக்கு நடைபெற்ற 9வது லீக் ஆட்டத்தில் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்-டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின.

ஸ்டீவன் சுமித் தலைமையிலான புனே அணி முதலாவது லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. 2வது லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியிடம் தோல்வி கண்டது. ஜாகீர்கான் தலைமையிலான டெல்லி அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 15 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியிடம் வீழ்ந்தது.

முன்னதாக டாஸ் வென்ற புனே அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, களமிறங்கிய டெல்லி அணி தொடக்கத்தில் தடுமாறினாலும் அந்த அணியின் சஞ்சு சாம்சனனின் ஆட்டத்தால் ரன் வேட்டை எகிறியது. அவர் 63 பந்தில் 8 பவுண்டரி, 5 சிக்சருடன் 100 ரன்கள் எடுத்து, தனது தனிப்பட்ட முதல் சதத்தை பூர்த்தி செய்தார். 

 

 

அவரைத் தொடர்ந்து கிறிஸ் மோரிஸ் 9 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 38 ரன்கள் சேர்க்க, டெல்லி டேர்டெவில்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. 

இதையடுத்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய புனே அணி, தொடக்கம் முதலே தடுமாறியது. அந்த அணியின் சார்பாக மயான்க் அகர்வால் அதிகபட்சமாக 18 பந்துகளில் 2 பவுண்டரிகள் உட்பட 20 ரன்களை சேர்த்தார். மளமளவென விக்கெட்டுகளை இழந்து வந்த புனே அணியில் மற்ற வீரர்கள் அனைவருமே சொற்ப ரன்களில் வெளியேறினர். 

இறுதியில் புனே அணி 16 ஓவர்களில் 108 ரன்கள் எடுத்திருந்த போது, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து டெல்லி அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

 

 

Trending News