இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளை இந்திய அணி வெற்றி பெற்றதால், 3வது போட்டியில் இந்திய அணி ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டன. 20 ஓவர் போட்டியில் ஆவேஷ்கான் இந்திய அணிக்காக முதன்முதலாக அறிமுகமானார். டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
மேலும் படிக்க | ’ஓய்வு பெற சொல்வதா?’ ராகுல் டிராவிட், கங்குலி மீது விருதிமான் சஹா காட்டம்
தொடக்க ஆட்டக்காரர்களாக ருத்ராஜ் கெய்வாட் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் களமிறங்கினர். ருதுராஜ் 4 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் அய்யர் கூட்டணி நிதானமாக ஆடியது. 25 ரன்களில் ஸ்ரேயாஸ் ஆட்டமிழக்க, இஷான் கிஷன் 34 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இருவரும் அடுத்தடுத்த ஓவர்களில் வெளியேறிய நிலையில், மிடில் ஆர்டரில் களமிறங்கிய ரோகித் சர்மா 7 ரன்களில் அவுட்டானார்.
அதன்பின் களம்புகுந்த சூர்யகுமார் யாதவ் மற்றும் வெங்கடேஷ் ஐயர் இருவரும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து துவசம்சம் செய்தனர். சிக்சர்களாக பறக்கவிட்ட சூர்ய குமார் யாதவ், கடைசி ஓவரில் மட்டும் 3 சிக்சர்கள் விளாசினார். மொத்தம் 31 பந்துகளை எதிர்கொண்ட அவர், 7 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 65 ரன்கள் குவித்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். வெங்கடேஷ் அய்யர் 19 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 35 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். முடிவில் இந்திய அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது. 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி பின்னர் விளையாடியது.
மேலும் படிக்க | இந்திய அணியில் பறிபோன வாய்ப்பு - ரஞ்சி டிராபியில் அதிரடி காட்டும் புஜாரா, ரஹானே
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR