INDvsSL: ரோகித்துடன் ஓபனிங் இறங்கப்போவது யார்? கேப்டன் பதில் இதுதான்

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஓபனிங் இறங்கப்போவது யார்? என்ற கேள்விக்கு கேப்டன் ரோகித் சர்மா பதில் அளித்துள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 3, 2022, 04:00 PM IST
  • இந்தியா - இலங்கை அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி
  • பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நாளை தொடங்குகிறது
  • ஓபனிங் யார் இறங்கப்போகிறார்கள்? என்ற கேள்விக்கு ரோகித் பதில்
INDvsSL: ரோகித்துடன் ஓபனிங் இறங்கப்போவது யார்? கேப்டன் பதில் இதுதான் title=

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை மொகாலியில் தொடங்குகிறது. விராட் கோலியின் 100வது டெஸ்ட்,  ரோகித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி என்பதால், இந்திய அணியினர் புது உற்சாகத்துடன் களம் காண உள்ளனர். இதனையொட்டி செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் ரோகித் சர்மா, பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். நாளை தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில், உங்களுடன் யார் ஓபனிங் இறங்கப்போகிறார்கள்? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

மேலும் படிக்க | டெஸ்ட் கேப்டனாக ரோஹித்! கோலியின் பங்கு என்ன?

இதற்கு பதில் அளித்த அவர், மயங்க் அகர்வால், சுப்மான் கில், ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோர் அணியில் உள்ளதால், களமிறங்கும்போது யார் ஓபனிங் என முடிவு செய்வோம் எனத் தெரிவித்துள்ளார். ஓபனிங் யார் இறங்க வேண்டும் என்பதில் தனக்கு எந்த முன்னுரிமையும் இல்லை எனத் தெரிவித்த ரோகித் சர்மா, அனைவருக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் அணியின் தேர்வு இருக்கும் என பூடகமான பதிலை தெரிவித்துள்ளார்.

அவரின் இந்த பதிலால் இலங்கை அணிக்கு எதிரான நாளைய டெஸ்ட் போட்டியில் ரோகித்துடன் ஓபனிங் இறங்கப்போவது யார்? என்ற கேள்விக்கு, போட்டி தொடங்கும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. ஓபனிங் பேட்ஸ்மேன் ரேஸில் மயங்க் அகர்வால், சுப்மான் கில் மற்றும் ஹனுமா விஹாரி, ஸ்ரேயாஸ் என நான்கு பேரும் இருக்கின்றனர். அதில் சுப்மான் கில் மற்றும் மயங்க் அகர்வாலுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருவரில் யாரேனும் ஒருவர் ஓபனிங் இறங்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | IPL 2022 முதல் கட்ட போட்டிகளில் 25 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News