3வது டி-20 போட்டி: டாஸ் வென்ற நியூசிலாந்து பீல்டிங் தேர்வு

Last Updated : Nov 7, 2017, 09:22 PM IST
3வது டி-20 போட்டி: டாஸ் வென்ற நியூசிலாந்து பீல்டிங் தேர்வு title=

இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்று டி-20 போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது.

டாஸ் போடுவதில் வானிலை காரணமாக சற்று தாமதம் ஆகும் எனத் தெரிகிறது. தற்போது நிலவரப்படி மழை பெய்து வருவதால்,  டாஸ் போடுவதில் கால தாமதம் ஆகும். தற்போது மழை நின்று விட்டது. ஓவர்கள் குறைத்து ஆட்டம் ஆரம்பிக்கப் படும் என எதிர்பார்க்கப்பட்டது. 9 மணிக்கு ஆட்டம் ஆரம்பிக்கலாம் என தெரிகிறது.

9.15மணிக்கு டாஸ் போடப்படும். 9.30 மணிக்கு ஆட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு அணிகளும் தலா 8 ஓவர் விளையாடும். மொத்தம் 16 ஓவர் போட்டி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒரு அணியில் பந்து வீச்சாளர் தலா 2 ஓவர் மட்டுமே வீச வேண்டும். ஒரு அணியில் மொத்தம் 4 பவுலர் என மொத்தம் 8 ஓவர்கள் வீசுவார்கள்.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பீல்ட்ங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணி முதலில் தனது பேட்டிங் தொடங்க உள்ளது. 

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. 

டெல்லியில் நடந்த முதல் டி-20 போட்டியில் இந்திய அணியும், ராஜ்கோட்டில் நடந்த இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்றது. இதையடுத்து மூன்று டி-20 போட்டிகளை கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

இந்நிலையில் மூன்றாவது போட்டியில் இந்தியா வெல்லும் பட்சத்தில் தொடரை வென்றுவிடும் என்பதால் இது மிகவும் முக்கியமான போட்டியாக இரு அணிகளுக்கும் பார்க்கப்படுகிறது.

Trending News