ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்த 3 வீரர்கள் நீக்கம்?

ஆசிய கோப்பையில் சரியாக விளையாடாதா வீரர்களுக்கு எதிர்வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Sep 12, 2022, 07:01 AM IST
  • ஆஸ்திரேலியா அணியுடன் இந்தியா விளையாட உள்ளது.
  • உலக கோப்பைக்கு முன்னதாக இந்த தொடர் நடக்க உள்ளது.
  • இரு அணிகளுக்கும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்த 3 வீரர்கள் நீக்கம்? title=

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் உலக கோப்பைக்கு முன்னதாக டி20 தொடரில் விளையாடுகிறது. மூன்று டி20 போட்டிகளில் செப்டம்பர் 20 முதல் 25 வரை இரு அணிகளும் விளையாடப்படும். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா என இரண்டு அணிகளும் இன்னும் தங்கள் அணியை அறிவிக்கவில்லை. இந்தியா சமீபத்தில் ஆசிய கோப்பை 2022 இல் விளையாடியது, அங்கு அவர்கள் எதிர்பாராத விதமாக இறுதிப் போட்டியிலிருந்து வெளியேறினர்.  அணிக்கு போதுமான அளவு சிறப்பாக செயல்படாதா சில வீரர்கள் இருந்தனர், அவர்களின் செயல்திறன் ஆசிய போட்டியில் இருந்து இந்தியாவை வெளியேற்றியது. எனவே, அவர்கள் IND vs AUS டி20 தொடரில் இருந்து நீக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசியக் கோப்பை 2022ன் அடிப்படையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 இந்திய அணியில் இருந்து நீக்கப்படக்கூடிய 3 இந்திய வீரர்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

மேலும் படிக்க | சச்சின் மகளை தவிர்த்து மற்றொரு நடிகையை டேட்டிங் செய்யும் கில்?

1. தீபக் ஹூடா

இந்த பட்டியலில் முதல் வீரர் தீபக் ஹூடா. ஹூடா ஆசிய கோப்பை 2022 இன் ஒரு பகுதியாக அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவராக இருந்தார். அவர் கடைசி ஓவர்களில் அணிக்காக ரன்களை அடித்து நொறுக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அணிக்கு ஒரு நல்ல ஆட்டத்தை கொண்டு வர முற்றிலும் தவறிவிட்டார். அவர் 2 ஆட்டங்களில் பேட்டிங் செய்து 9.50 சராசரியில் 19 ரன்கள் எடுத்தார். முக்கியமான கட்டத்தில் விக்கெட்டையும் இழந்தார்.

hooda

2. அவேஷ் கான்

ஆசியக் கோப்பை 2022-ல் அவரது மோசமான ஆட்டத்திற்குப் பிறகு IND vs AUS டி20 தொடரில் இருந்து நீக்கப்படக்கூடிய மற்றொரு வீரர் அவேஷ் கான் ஆவார். வலது கை வேகப்பந்து வீச்சாளர் போட்டியில் 2 ஆட்டங்களில் விளையாடினார். 36.0 சராசரியில் 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். ஒரு ஆட்டத்தில், அவர் தனது 4-ஓவர் ஸ்பெல்லில் 50-க்கும் அதிகமான ரன்களை வாரி வழங்கினார். உடல்நலக்குறைவு காரணமாக அவர் போட்டியிலிருந்து பாதியிலேயே வெளியேறினார். அவர் விளையாடுவதற்கு மீண்டும் உடற்தகுதியுடன் இருந்தாலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 ஐ தொடரில் அவர் நீக்கப்பட வாய்ப்புள்ளது.

3. ரிஷப் பந்த்

இந்த பட்டியலில் உள்ள மற்றொரு வீரர் ரிஷப் பந்த். அனைத்து வடிவங்களிலும் அணிக்கான விக்கெட் கீப்பரின் முதன்மை தேர்வாக பந்த் இருந்தாலும், சமீப காலங்களில் அவர் டி20 வடிவமைப்பில் திறமையற்றவராக இருந்து வருகிறார். 2022 ஆசிய கோப்பையிலும் நல்ல ஆட்டங்களை வெளிப்படுத்தத் தவறிவிட்டார்.  3 ஆட்டங்களில், 25.50 சராசரியில் 51 ரன்கள் எடுத்தார். போட்டிகளின் போது முக்கியமான தருணங்களில் விக்கெட்டையும் இழந்தார். எனவே, அவர் IND vs AUS டி20 தொடரில் நீக்கப்படலாம் மற்றும் தினேஷ் கார்த்திக் அல்லது இஷான் கிஷான் போன்ற விக்கெட் கீப்பர்கள் அணியில் சேர்க்கப்படலாம்.

மேலும் படிக்க | உலக கோப்பைக்கான இந்திய அணி இதுதான்! வெளியான தகவல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News