முதல் டெஸ்ட் : இந்தியா 304 ​​ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!!

Last Updated : Jul 29, 2017, 04:52 PM IST
முதல் டெஸ்ட் : இந்தியா 304 ​​ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!! title=

முதல் டெஸ்டில் இந்தியா 304 ​​ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இலங்கைக்கு எதிராக் காலேவில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்க்ஸில் 133.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 600 ரன்கள் எடுத்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை துவங்கிய இலங்கை 78.3 ஓவருக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து 291 ரன்கள் எடுத்தது. 

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய தனது இரண்டாவது இன்னிங்க்சை நேன்று விளையாடியது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 189/3 எடுத்தது. இதனால் இந்திய அணி 498 ரன்கள்களுடன் முன்னிலையில் இருந்தது. விராத் கோலி 76(114) ரன்களுடன் களத்தில் இருந்தார். 

நான்காவது நாள் ஆட்டம் இன்று துவங்கியது. நன்றாக ஆடிய கேப்டன் விராத் கோலி 137 பந்தில் 103 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் தனது 17_வது சதத்தை பூர்த்தி செய்தார். அஜிங்கியா ரஹானே 23(18) ரன்கள் எடுத்தார். இருவரும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். இந்நிலையில், இந்திய அணி டிக்ளேர் செய்தது.

இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 53 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்து. இதன்மூலம் இலங்கை அணிக்கு வெற்றி பெற 550 ரன்கள் இலக்காக நிர்ணையம் செய்யப்பட்டுள்ளது.

 

 

இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்க்சில் 76.5 ஓவரில் 245 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் முதல் டெஸ்டில் இந்தியா 304 ​​ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி மூலம் டெஸ்டி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னணி வகிக்கிறது.

 

 

முதல் டெஸ்டில் ஆட்ட நாயகனாக ஷிகர் தவன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

Trending News