Olympic Games Tokyo 2020: ஆண்களுக்கான 65 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தத்தில் இந்தியாவின் பஜ்ரங் புனியா (Bajrang Punia) வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம் இந்தியாவுக்கு ஆறாவது பதக்கம் கிடைத்தது. 65 கிலோ ஃப்ரீஸ்டைல் வெண்கலப் பதக்கப் போட்டியில் கஜகஸ்தான் மல்யுத்த வீரரை 8-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றார். அரையிறுதி தோல்விக்குப் பிறகு, பதக்கம் வெல்ல வேண்டும் என பஜ்ரங்கிற்கு அதிக அழுத்தம் இருந்தது. ஆனால் அவர் ஒரு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி பதக்கத்தை வென்றார்.
இன்றைய ஆட்டத்தின் முதல் மூன்று நிமிடங்களில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா 2-0 என முன்னிலை பெற்றனர். ஆனால் அதன் பிறகு தனது ஆக்ரோசமான வேகத்தால் ஒரு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடைசி மூன்று நிமிடங்களில் 6 புள்ளிகளை சேகரித்து 8-0 என்ற வித்தியாசத்தில் போட்டியை வென்றனர்.
#TokyoOlympics | Wrestler Bajrang Punia wins #Bronze medal in Men's Freestyle 65kg against Kazakhstan's Daulet Niyazbekov, 8-0
(File pic) pic.twitter.com/LzMlCHxzaK
— ANI (@ANI) August 7, 2021
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் மொத்த பதக்கங்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. முதல் பதக்கம் முதல் நாளில் பளு தூக்குதலில் மீராபாய் சானுவால் வெள்ளி வடிவத்தில் வழங்கப்பட்டது. இதன் பிறகு, பிவி சிந்து பேட்மிண்டனில் இரண்டாவது பதக்கம் பெற்றார். மூன்றாவது பதக்கத்தை லவ்லினா போர்கெஹான் நாட்டுக்காக குத்துச்சண்டை போட்டியில் வென்றார். இதற்குப் பிறகு, ரவி தஹியா மல்யுத்த வெள்ளிப் பதக்கத்தைப் பெற்று நான்கு பதக்கங்களை நாட்டிற்கு வென்று தந்தார். இதன் பிறகு, ஆண்கள் ஹாக்கி அணியில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு வெண்கலப் பதக்கம் வென்றது இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை ஐந்தாக உயர்த்தியது. இத்தகைய சூழ்நிலையில், தங்கப் பதக்கத்தை வெல்வதற்கான போட்டியாளராகக் கருதப்பட்ட பஜ்ரங் வெண்கலப் பதக்கத்தில் (Bronze Medal) திருப்தி அடைய வேண்டி இருந்தது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR