ஜிம்பாப்வே அணிக்கு தடை; திட்டத்தை மாற்றிய BCCI; இந்த அணி இந்தியாவுக்கு வரும்

அடுத்த ஆண்டு இந்திய சுற்றுப்பயணத்தில் இலங்கை அணி ஜனவரி 5 முதல் 10 வரை மூன்று டி 20 போட்டிகளில் விளையாட உள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 25, 2019, 08:03 PM IST
ஜிம்பாப்வே அணிக்கு தடை; திட்டத்தை மாற்றிய BCCI; இந்த அணி இந்தியாவுக்கு வரும் title=

மும்பை: இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு ஜனவரியில் இந்தியாவுக்கு வருகை தர உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரை (India vs Sri Lanka) விளையாட உள்ளது. இதனையடுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) இன்று (புதன்கிழமை) ஒரு அறிவிப்பை வெளியிட்டது. தற்போதைய நாட்களில் இந்திய அணி (India vs South Africa) தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக உள்நாட்டில் விளையாடி வருகிறது. அதேபோல இந்த ஆண்டு பங்களாதேஷ், ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இந்தியாவுக்கு வருகை தர உள்ளனர்.

அடுத்த ஆண்டு இந்திய சுற்றுப்பயணத்தில் இலங்கை அணி ஜனவரி 5 முதல் 10 வரை மூன்று டி 20 போட்டிகளில் விளையாடும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. முதல் டி-20 போட்டி இரு அணிகளுக்கு இடையே ஜனவரி 5 ஆம் தேதி குவஹாத்தியில் நடைபெறும். இதன் பின்னர், ஜனவரி 7 ஆம் தேதி இந்தூரிலும், ஜனவரி 10 ஆம் தேதி புனேவிலும் போட்டிகள் நடைபெறும்.

அடுத்த ஆண்டு ஜனவரியில் ஜிம்பாப்வே அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தது. ஆனால் சமீபத்தில் ஐ.சி.சி (International Cricket Council) ஜிம்பாப்வேக்கு தடை விதித்தது. இதனால் ஜிம்பாப்வே (Zimbabwe) இந்தியாவுக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டது. இதன் பின்னர் ஜிம்பாப்வேக்கு பதிலாக இலங்கை அணியை அழைக்கலாம் என இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது. இந்திய வாரியம் சார்பாக இலங்கை அணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் (Sri Lanka national cricket team) ஒப்புதல் அளித்துள்ளது. இதன் பின்னர் தான் இலங்கை அணி இந்தியாவுக்கு வருகை தர உள்ளது என்றும், மூன்று டி-20 போட்டிகளில் விளையாட உள்ளது என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டது

இந்த நாட்களில் இலங்கை அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் உள்ளது. அந்த அணி பாகிஸ்தானுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடுவார். இலங்கையின் 10 மூத்த வீரர்கள் பாகிஸ்தானில் பாதுகாப்பு இல்லை எனக்கூறி அங்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோது டி-20 போட்டி விவரம்:- 

05 சனவரி - முதல் போட்டி - குவஹாத்தி (Guwahati)
07 சனவரி - இரண்டாவது போட்டி - இந்தூர் (Indore)
10 சனவரி - மூன்றாவது போட்டி - பூனா (Pune)

Trending News