ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் குரூப் 4 சுற்றில் மோதுகின்றன. துபாய் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், பந்துவீச்சை தேர்வு செய்தார். முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடும்போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, டாஸ் வெற்றி பெற்று பந்துவீச்சையே தேர்வு செய்திருந்தார். இதற்கு முக்கிய காரணம், இந்த மைதானத்தில் பந்துவீச்சை தேர்வு செய்யும் அணிகள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கருதுகின்றனர்.
துபாய் மைதானத்தைப் பொறுத்தவரை இரவு நேரத்தில் அதிக பனிப்பொழிவு இருக்கும். இதனால் பந்துவீச்சு அணி, திட்டமிட்டபடி பந்துவீச முடியாது. சரியான திசையில், வேகத்தில் பந்துவீச முடியாத காரணங்களால் பேட்டிங் அணி இதனை சாதகமாக பயன்படுத்தி எளிதாக வெற்றி பெறலாம். இந்த யுக்தி பந்துவீச்சை தேர்வு செய்த அனைத்து அணிகளும் பின்பற்றுகின்றன. அந்த மைதானத்தில் நடைபெற்ற கடைசி 10 போட்டிகளில் டாஸ் வெற்றி பெற்ற அனைத்து அணிகளும் பந்துவீச்சையே தேர்வு செய்திருக்கின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமிடம், பந்துவீச்சை ஏன் தேர்வு செய்தீர்கள் என்று கேட்கப்பட்டபோது, இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீசுவதற்கான சூழல் இருக்காது என்பதை தெரிவித்தார். இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேசும்போது, டாஸ் வெற்றி பெற்றிருந்தால் தாங்களும் பந்துவீச்சையே தேர்வு செய்திருப்போம் எனக் கூறினார். இருப்பினும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம் எனக் கூறினார்.
மேலும் படிக்க | மீண்டும் மோதிக்கொள்ளும் இந்தியா பாகிஸ்தான்! ஆசிய கோப்பையில் சுவாரஸ்யம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEata