மான்செஸ்டர்: உலகக் கோப்பை தொடரில் ரவுண்ட் ராபின் சுற்றுகள் முடிவடைந்து 4 அணிகள் அரையிறுதிக்கு நுழைந்துவிட்டன. 15 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்திலும், 14 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி இரண்டாம் இடத்திலும், 12 புலிகளுடன் இங்கிலாந்தின் மூன்றாம் இடத்திலும் மற்றும் 11 புள்ளிகள் பெற்று ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து நான்காவது அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது.
முதல் அரையிறுதி போட்டி செவ்வாய்க்கிழமையான் இன்று (ஜூலை 9) மான்செஸ்டரில் நடைபெற இருக்கிறது. அதில் முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணி, நான்காவது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது. அதைத் தொடர்ந்து 11 ஆம் தேதி இரண்டாவது அரையிறுதி போட்டி பிர்மிங்காம் மைதானத்தில் நடக்க இருக்கிறது. இதில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இரு அணிகளும் மோதுகின்றன.
2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு விராட் கோலி கேப்டனாக உள்ளார். அதேபோல நியூசிலாந்து அணிக்கு கேன் வில்லியம்சன் கேப்டனாக உள்ளார். இவர்கள் இருவருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது.
அதாவது இந்த இரண்டு பேரும் 2008 ஆம் ஆண்டு அண்டர் 19 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு விராட் கோலியும், நியூசிலாந்து அணிக்கு கேன் வில்லியம்சனும் கேப்டனாக இருந்தனர். 11 ஆண்டுகள் கழித்து ஒருநாள் உலகக்கோப்பை போட்டியின் அரையிறுதியில் மீண்டும் அதே கேப்டன்கள் சந்திக்கின்றனர்.
2008 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இன்று நடைபெறவிருக்கும் போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்பதை பார்க்க காத்திருப்போம்..!!