3வது டி-20 போட்டி... தொடரை வெல்லப்போவது யார்?

Last Updated : Nov 7, 2017, 10:24 AM IST
3வது டி-20 போட்டி... தொடரை வெல்லப்போவது யார்? title=

 

இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்று டி-20 போட்டி இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மாலை நடக்க இருக்கிறது. 

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. 

டெல்லியில் நடந்த முதல் டி-20 போட்டியில் இந்திய அணியும், ராஜ்கோட்டில் நடந்த இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்றது. இதையடுத்து மூன்று டி-20 போட்டிகளை கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

இந்நிலையில் மூன்றாவது போட்டியில் இந்தியா வெல்லும் பட்சத்தில் தொடரை வென்றுவிடும் என்பதால் இது மிகவும் முக்கியமான போட்டியாக இரு அணிகளுக்கும் பார்க்கப்படுகிறது.

Trending News