முதல் டி20 போட்டி: இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா!!

மூன்று மாதங்கள் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணமாகச் சென்றுள்ள இந்திய அணி, அந்நாட்டு அணிக்கு எதிராக மூன்று டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகளிலும், ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட உள்ளது. 

Last Updated : Jul 4, 2018, 09:14 AM IST
முதல் டி20 போட்டி: இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா!! title=

மூன்று மாதங்கள் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணமாகச் சென்றுள்ள இந்திய அணி, அந்நாட்டு அணிக்கு எதிராக மூன்று டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகளிலும், ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட உள்ளது. 

இந்நிலையில், நேற்று நடைபெற உள்ள முதல் டி-20 போட்டியில் இந்திய அணி 18.2 ஓவர்களில் 163 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

இந்த போட்டி நேற்று மான்செஸ்டர் நகரில் நடைபெற்றது டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராத்கோஹ்லி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையொட்டி  இங்கிலந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. 

20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து இங்கிலாந்து அணி 159 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்களான பட்லர் 60 ரன்களும், ராய் 30 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியின் குல்தீப் யாதவ் மிக அபாரமாக பந்துவீசி ஐந்து விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 

அடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் தவான் 4 ரன்களிலும் ரோஹித் சர்ம 32 ரன்களிலும் அவுட் ஆகினர். இருப்பினும் ராகுல் அபாரமாக விளையாடி 54 பந்துகளில் 101 ரன்கள் அடித்தார். இதனையடுத்து இந்திய அணி 18.2 ஓவர்களில் 163 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 5 விக்கெட்டுக்களை வீழ்த்திய குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

Trending News