Kohli-தான் எப்போதும் எனது கேப்டன், உங்களுக்கு கிசுகிசு எதுவும் கிடைக்காது: Rahane

ஆஸ்திரேலியாவில் நடந்த தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று உற்சாகத்தின் உச்சியில் இருந்த இந்திய அணி, இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்டில் 227 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 12, 2021, 06:17 PM IST
  • இங்கு உங்களுக்கு மசாலா கலந்த எந்த செய்தியும் கிடைக்காது-ரஹானே.
  • ரஹானே ஆஸ்திரேலியாவில் தனது பொறுப்பை மிகச் சிறப்பாக நிறைவேற்றினார்-விராட் கோலி.
  • அணியின் வெற்றிதான் எப்போதும் எங்கள் இலக்காக இருந்துள்ளது-விராட் கோலி.
Kohli-தான் எப்போதும் எனது கேப்டன், உங்களுக்கு கிசுகிசு எதுவும் கிடைக்காது: Rahane title=

Chennai: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது துணை கேப்டன் அஜின்கியா ரஹானேவுடன் தனது நட்பைப் பற்றி சில நாட்களுக்கு முன்னர்தான் பேசினார். இப்போது, ரஹானே விராட் கோலியைப் பற்றி சில விஷயங்களைக் கூறியுள்ளார். ‘விராட் கோலி தான் தொடர்ந்து தனது கேப்டனாக இருப்பார்’ என்று அவர் மீண்டும் ஒரு முறை ஆணித்தரமாக தெரிவித்துள்ளார்.  

சனிக்கிழமை (பிப்ரவரி 13) சென்னையில் நடைபெறவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை முன்னிட்டு இந்திய அணியின் துணை கேப்டன் அஜின்கியா ரஹானே ஊடகங்களுடன் உரையாற்றினார்.

"கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்தில் ஒரே மாதிரியான ஆற்றலையும் சக்தியையும் வைத்திருப்பது எப்போதும் சாத்தியமில்லை. முதல் டெஸ்டில் சில நேரங்களில் மைதானத்தில் வீரர்களிடையே உற்சாகமில்லாமல் போனது. ஆனால் அதற்கு விராட் கோலி (Virat Kohli) கேப்டனாக மீண்டும் அணியில் வந்தது காரணமில்லை. விராட் கோலி எனது கேப்டனாக இருந்தார், தொடர்ந்து இருப்பார். இங்கு உங்களுக்கு மசாலா கலந்த எந்த செய்தியோ கிசி-கிசு-வோ கிடைக்காது” என்று ரஹானே வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 12) சென்னையிலிருந்து மெய்நிகர் ஊடக சந்திப்பில் கூறினார்.

ALSO READ: இங்கிலாந்து கிரிக்கெட் அணியை ஃபேஸ்புக் BLOCK செய்த காரணம் என்ன?

ஆஸ்திரேலியாவில் நடந்த தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று உற்சாகத்தின் உச்சியில் இருந்த இந்திய அணி (Team India), இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்டில் 227 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கோலி தனது முதல் மகளின் பிறப்பிற்காக இந்தியா திரும்பியதால், ஆஸ்திரேலியாவில் கடைசி மூன்று போட்டிகளில் அவர் இடம்பெறவில்லை. இங்கிலாந்துடனான முதல் டெஸ்டில்தான் அவர் அணியுடன் கேப்டனாக இணைந்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ஏற்பட்ட தோல்வி, தொடர்ச்சியாக கோலியின் நான்காவது டெஸ்ட் தோல்வியாகும். இதற்கு முன்னர் அவர் ஆடிய நியூசிலாந்துக்கு எதிரான இரு போட்டிகளிலும், அடிலைடில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியிலும் இந்தியா தோற்றது.

முதல் டெஸ்டில் ரஹானே ஒரு பேட்ஸ்மேனாக ஒழுங்காக விளையாடாததைப் பற்றி கேட்கப்பட்டதற்கு பதிலளித்த கோலி, “எனக்கும் ரஹானேவுக்கும் (Ajinkya Rahane) இடையில் மட்டுமல்ல, எங்கள் ஒட்டுமொத்த அணியின் நட்பும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. நாங்கள் அனைவரும், ஒரே ஒரு இலக்கை நோக்கிதான் செயல்படுகிறோம். அது இந்தியாவிற்கு வெற்றியை பெற்றுத் தருவது.” என்றார்.

 "ரஹானே ஆஸ்திரேலியாவில் தனது பொறுப்பை மிகச் சிறப்பாக நிறைவேற்றினார் என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன். அவர் அணியை வெற்றியை நோக்கி வழிநடத்தியதைப் பார்க்க மிகவும் நன்றாக இருந்தது. அணியின் வெற்றிதான் எப்போதும் எங்கள் இலக்காக இருந்துள்ளது" என்று கோலி மேலும் கூறினார்.

ALSO READ: IPL-க்கு முன் சச்சின் மகன் Arjun Tendulkar-க்கு பெரிய ஏமாற்றம்: அணியில் பெயர் இல்லை

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News