ICC T20 World Cup: உலக கோப்பை பைனல் போட்டியை நேரில் பார்க்க முடியுமா?

பிசிசிஐ மற்றும் ஈசிபி ஆகியவை இறுதிப் போட்டிக்குத் பெரும் திரளான ரசிகர்களை அனுமதிக்க UAE அதிகாரிகளிடம் அனுமதி கோருகின்றன.

Written by - RK Spark | Last Updated : Sep 27, 2021, 04:53 PM IST
  • இந்த ஆண்டு உலக கோப்பை ​​ஹோஸ்டிங் உரிமை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (பிசிசிஐ) உள்ளது.
  • கோவிட் -19 நெறிமுறை நடைமுறையுடன் ஐபிஎல் போட்டிகளில் ஏற்கனவே யுஏஇ-யில் ரசிகர்கள் அனுமதி அழைக்கப்பட்டுள்ளனர்.
ICC T20 World Cup: உலக கோப்பை பைனல் போட்டியை நேரில் பார்க்க முடியுமா? title=

அக்டோபர் 17 முதல் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐசிசி டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது.   இந்த ஆண்டு உலக கோப்பை ​​ஹோஸ்டிங் உரிமை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (பிசிசிஐ) உள்ளது. ஆனால் கொரோனா காரணமாக பிசிசிஐ மற்றும் எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் (இசிபி) உடன் இணைத்து ஐக்கிய அமீரகத்தில் நடக்க உள்ளது.  நவம்பர் 14ம் தேதி நடக்கவுள்ள உலக கோப்பை இறுதி போட்டிக்கு ஸ்டேடியத்தில் பெரும் ரசிகர்களை அனுமதிக்க வேண்டும் என்று பிசிசியை UAE அதிகாரிகளிடம் அனுமதி கேட்டுள்ளது.

இது குறித்து பிசிசியை வட்டாரங்களில் இருந்த வந்த தகவலில் அடிப்படையில் உலக கோப்பை இறுதி போட்டி  நிகழ்வில் 25,000 ரசிகர்களை பார்க்க அனுமதிக்க இந்திய வாரியம் ஆர்வமாக உள்ளதாகவும், அதற்கான அனுமதியை ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளிடம் கேட்டு உள்ளதாக கூறப்படுகிறது.  பிசிசிஐ மற்றும் இசிபி இறுதிப் போட்டி நல்ல கூட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளனர்.  கோவிட் -19 நெறிமுறை நடைமுறையுடன் ஐபிஎல் போட்டிகளில் ஏற்கனவே யுஏஇ-யில் ரசிகர்கள் அனுமதி அழைக்கப்பட்டுள்ளனர்.

bcci

துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு செல்லும் ரசிகர்கள் அங்கு நுழைவதற்கு 48 மணி நேரத்திற்கு முன் பிசிஆர் சோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை, ஆனால் இரண்டு கோவிட் -19 தடுப்பூசி செலுத்தியதற்காக சான்றிதழ் தேவை.  ஸ்டேடியங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட ரசிகர்களின் வயது ஷார்ஜாவில் சற்று வித்தியாசமானது. ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நுழைவதற்கு குறைந்தபட்ச வயது 16+ ஆகும். தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழுடன் ​, 48 மணி நேரத்திற்குள்  எடுத்த ​PCR சோதனை முடிவுகள் அவசியம்.     

அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடியத்திலும்  16 வயதுக்கு மேற்பட்ட ரசிகர்கள், தடுப்பூசி சான்று மற்றும் பிசிஆர் சோதனை முடிவுகளுடன் 48 மணி நேரத்திற்கு முன்னதாக செல்ல வேண்டும். 12-15 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி ஆதாரம் தேவையில்லை ஆனால் PCR சோதனை அறிக்கையை எடுத்துச் செல்ல வேண்டும். 12 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் 21 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் உடன் இருக்க வேண்டும்.

அக்டோபர் 24 அன்று பரம எதிரிகளான பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை விளையாடும் அதே வேளையில், அக்டோபர் 17 அன்று ஸ்காட்லாந்து மற்றும் ஓமன் மற்றும் பப்புவா நியூ கினியா இடையே முதல் சுற்று மோதலுடன் போட்டி தொடங்குகிறது. பங்களாதேஷ், பி பிரிவில் உள்ள மற்ற அணிகள், மாலை போட்டியில் மோதுகின்றன.  முதல் அரையிறுதி நவம்பர் 10 அன்று அபுதாபியில் நடைபெறும். இரண்டாவது அரையிறுதி நவம்பர் 11 அன்று துபாயில் நடைபெற உள்ளது. உலக கோப்பை இறுதி போட்டியி நவம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெறும் உள்ளது. மேலும்,  திங்கட்கிழமை இறுதிப் போட்டிக்கான ரிசர்வ் நாளாக அணிவிக்கபட்டுள்ளது.

t20

ASLO READ தீடீரென ஓய்வை அறிவித்த சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News