டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. பிரதான சுற்றான சூப்பர் 12 சுற்று நேற்று தொடங்கியது. உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த இந்தியா - பாகிஸ்தான் லீக் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் ரிஷப் பந்திற்கு வாய்ப்பில்லை. 2 சுழற்பந்துவீச்சாளர்கள், 4 வேகப்பந்துவீச்சாளர்கள் என 6 பௌலர்கள் உடன் இந்தியா களமிறங்குகிறது. பிளேயிங் லெவனில் அக்சர் படேல் மட்டுமே இடதுகை வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை 3 வேகப்பந்துவீச்சாளர்கள், 2 சுழற்பந்துவீச்சாளர்கள் என்ற கணக்கில் விளையாடுகிறது. வழக்கம்போல், பாபர் அசாம் - முகமது ரிஸ்வான் ஆகியோர் ஓப்பனிங் இறங்கியுள்ளனர்.
\ Toss Update & Team News from MCG @ImRo45 has won the toss & #TeamIndia have elected to bowl against Pakistan. #T20WorldCup | #INDvPAK
Follow the match https://t.co/mc9useyHwY
Here's our Playing XI pic.twitter.com/1zahkeipvm
— BCCI (@BCCI) October 23, 2022
இந்தியா: ரோகித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி.
India have won the toss and opted to field in Match 4 of the Super 12 stage
Who are you cheering for?#INDvPAK | : https://t.co/H9EE5QNfGD pic.twitter.com/sMJ2f2sZAx
— ICC (@ICC) October 23, 2022
பாகிஸ்தான்: பாபர் ஆசாம் (கேப்டன்), முஹம்மது ரிஸ்வான், ஷான் மசூத், ஹைதர் அலி, முஹம்மது நவாஸ், ஷதாப் கான், அஃப்சார் அஹ்மத், ஆசிப் அலி, ஷஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ரியூஃப், நசீம் ஷா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ