ஐசிசி 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் தொடங்க இருக்கும் நிலையில், சர்வதேச அளவில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. பேட்ஸ்மேன், பவுலர் மற்றும் ஆல்ரவுண்டர்களுக்கான லேட்டஸ்ட் பட்டியலில், இந்திய வீரர் சூர்ய குமார் யாதவ் பேட்ஸ்மேன் பட்டியலில் 2வது இடத்தில் இருக்கிறார். முதல் இடத்தில் பாகிஸ்தான் ஓப்பனிங் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் உள்ளார். இருவருக்கும் இடையே முதல் இடத்தை பிடிப்பதில் பெரிய போட்டியே நடந்து வருகிறது.
அண்மையில் முதல் இடத்துக்கு சூர்ய குமார் யாதவ் முன்னேறிய நிலையில், அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக ஆடி மீண்டும் முதல் இட அரியணைக்கு ஏறினார் முகமது ரிஸ்வான். 853 புள்ளிகளுடன் முகமது ரிஸ்வான் முதல் இடத்திலும், 838 புள்ளிகளுடன் சூர்யகுமார் யாதவ் 2வது இடத்திலும் இருக்கின்றனர். பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 808 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருக்கிறார். இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோர் டாப் 10 லிஸ்டில் இல்லை.
டாப் 20 லிஸ்டில் இடம்பெற்றிருக்கும் அவர்களில் ராகுல் 13வது இடத்திலும், கோலி 14வது இடத்திலும் இருக்கின்றனர். இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 16வது இடத்தில் இருக்கிறார். பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் ஜாஸ் ஹேசில்வுட் முதல் இடத்தில் இருக்கிறார். இந்திய வீரர் புவனேஷ்வர்குமார் 13வது இடத்தில் இருக்கிறார். ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி முதல் இடத்தில் இருக்கிறார். ஹர்திக் பாண்டியா 5வது இடத்தில் இருக்கிறார்.
மேலும் படிக்க | BCCIயில் இருந்து சவுரவ் கங்குலி வெளியேறியதற்கு பாஜக காரணமில்லை: BJP விளக்கம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ