இந்தியா vs நியூசிலாந்து ஆட்டம் கைவிடப்பட்டது; இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி

நாட்டிங்ஹாமில் மழை பெய்து வருவதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்ப்பட்டு உள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Jun 13, 2019, 07:42 PM IST
இந்தியா vs நியூசிலாந்து ஆட்டம் கைவிடப்பட்டது; இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி title=

19:37 13-06-2019
நாட்டிங்ஹாம் நகரில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத இருந்த, இன்றைய போட்டி டாஸ் போடாமலே கைவிடப்பட்டது என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதனால் இந்தியா அணி 5 புள்ளியுடன் பட்டியலில் ஒரு இடம் முன்னேறி, 3வது இடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணி ஏழு புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

 

 


18:41 13-06-2019
நாட்டிங்ஹாம் நகரில் தொடர்ந்து பெய்து வந்த மழை குறைந்ததால், உணவு இடைவேளைக்கு பிறகு ஓவர்கள் குறைக்கப்பட்டு ஆட்டம் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் மழை பெய்து வருகிறது. இதனால் மைதானத்தில் உள்ள ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

 

 


18:00 13-06-2019
தற்போது நாட்டிங்ஹாம் நகரில் மழை குறைந்துள்ளதால், நேரம் கருதி 50 ஓவர் ஆட்டத்தை 20-20 ஓவராக குறைத்து ஆரம்பிக்கலாம் என்ற கோணத்தில் ஆலோசனை செய்யப்பட்டு வருகின்றனர்.

 


16:21 13-06-2019
மழையின் காரணமாக மைதானத்தில் மகிழ்ச்சி இல்லை. தற்போது மழை குறைந்துள்ளது. ஆட்டம் தொடருவது குறித்து அடுத்த ஆய்வு மாலை 5 மணிக்கு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

 


15:51 13-06-2019
நாட்டிங்ஹாமில் மழை குறைந்தது என எதிர்பார்த்த நிலையில், மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து மீண்டும் மைதானத்தில் கவர் போடப்பட்டுள்ளது.

 

 


15:07 13-06-2019
முதலில் மைதானத்தின் மேற்பரப்பில் ஈரப்பதம் அதிகமாக இருந்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்ப்பட்டது. தற்போது நாட்டிங்ஹாமில் மழை பெய்து வருவதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்ப்பட்டு உள்ளது.

 

 


14:44 13-06-2019

இந்திய அணி மற்றும் நியூசிலாந்து அணி மோதும் இன்றைய போட்டியில் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. அதற்கு காரணம் மைதானத்தின் மேற்பரப்பில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் சில நிமிடங்களுக்கு பிறகு டாஸ் போடப்படும் என அம்பயர் தெரிவித்துள்ளனர்.

 

 


டெல்லி/இங்கிலாந்து: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற உள்ள 18வது லீக் ஆட்டத்தில் இந்திய அணியும் மற்றும் நியூசிலாந்து அணியும் மோத உள்ளன. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்கும். இந்த நாட்டிங்காமில் உள்ள  ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கடந்த மே 30 ஆம் தேதி துவங்கிய 2019 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 14 வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கிறது. அதில் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான் அணிகள் ஆகும். 

இதுவரை மொத்தம் 17 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளது. இன்று நடைபெறும் 18வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்க்கொள்கிறது. தற்போது வரை உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆடிய லீக் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. 

நியூசிலாந்து அணி மூன்று போட்டிகளில் பங்கேற்று மூன்றிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இதேபோல் இந்திய அணி இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்று நான்காவது இடத்தில் உள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை சந்தித்த ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காததால், இன்றைய போட்டியின் மூலம் இவ்விரு அணிகளில் உலகக்கோப்பை தொடரில் யார் முதல் தோல்வியை சந்திப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் சம பலத்துடன் இருப்பதால் இன்றைய போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமேயில்லை. 

இவ்விரு அணிகளும் உலகக்கோப்பையில் 7 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் 3 முறை இந்தியாவும் 4 முறை நியூசிலாந்தும் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் 106 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இந்தியா 55 முறையும், நியூசிலாந்தும் 45 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

இந்தியா: ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட்கோலி (கேப்டன்), தினேஷ் கார்த்திக் அல்லது விஜய் சங்கர், டோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், முகமது ஷமி அல்லது குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா.

நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், காலின் முன்ரோ அல்லது ஹென்றி நிகோல்ஸ், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், டாம் லாதம், ஜேம்ஸ் நீஷம், காலின் டி கிரான்ட்ஹோம், மிட்செல் சான்ட்னெர், மேட் ஹென்றி, லோக்கி பெர்குசன், டிரென்ட் பவுல்ட்.

Trending News