ENG vs NZ: இங்கிலாந்து 305 ரன்கள் குவிப்பு; அரையிறுதிக்கு தகுதி பெறுமா...?

உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடர் 2019-ன் 41-வது லீக் ஆட்டம் செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்டில் உள்ள ரிவர்சைடு மைதானத்தில் நடைபெறுகிறது.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 3, 2019, 07:04 PM IST
ENG vs NZ: இங்கிலாந்து 305 ரன்கள் குவிப்பு; அரையிறுதிக்கு தகுதி பெறுமா...? title=

19:01 03-07-2019
இன்றைய நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜானி பேர்ஸ்டோவ் 106(99) ரன்கள் எடுத்தார். 306 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இன்னும் சற்று நேரத்தில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்ய உள்ளது.

 


14:36 03-07-2019
இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளதால், இன்னும் சற்று நேரத்தில் நியூசிலாந்து அணி பந்து வீச உள்ளது.

 

 


செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்: உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடர் 2019-ன் 41-வது லீக் ஆட்டம் செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்டில் உள்ள ரிவர்சைடு மைதானத்தில் நடைபெறவுள்ளது. பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து மோதுகின்றன.

உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இதுவரை 45 லீக் போட்டிகளில் 40 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், இன்று 41 வது லீக் போட்டி நடைபெறுகிறது. இது இங்கிலாந்து அணிக்கு மிக முக்கிய போட்டியாகும். இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. வெற்றி பெற்றால் 12 புள்ளியுடன் அரையிறுதிக்கு முன்னேறும்.

அதேவேளையில் நியூசிலாந்து அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் 13 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு தகுதி பெரும். ஒருவேளை தோல்வி அடைந்தால் 11 புள்ளியுடன் பட்டியலில் 4வது இடத்தில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்ப்படும். நியூசிலாந்து அணி அடுத்த சுற்றுக்கு வாய்ப்பு பெறுமா? பெறாதா? என்பது பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் போட்டி தான் முடிவு செய்யும்.

இந்த உலகக் கோப்பையில் இங்கிலாந்து மற்றும் நியூசீலாந்து அணிகள் நல்ல பார்மில் உள்ளனர். பலம் வாய்ந்த இரு அணிகள் இன்று மோத உள்ளதால், ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்த இரு அணிகளும் மொத்தம் 89 போட்டிகளில் மோதியுள்ளது. இதில் இங்கிலாந்து அணி 40 போட்டிகளிலும், நியூசிலாந்து அணி 43 போட்டிகளிலும் வெற்றியை பெற்றுள்ளனர். இரண்டு போட்டிகள் சமமாக முடிவடைந்துள்ளது. 4 போட்டிகளுக்கு முடிவு இல்லை.

இந்த இரு அணிகளும் உலகக் கோப்பை போட்டியில் மொத்தம் 8 போட்டிகள் விளையாடி உள்ளது. இதில் நியூசிலாந்து அணி 5 போட்டியில், இங்கிலாந்து அணி 3 போட்டியில் வெற்றியை பெற்றுள்ளனர்.

நியூசிலாந்து: கேன் வில்லியம்சன்(கேப்டன்), டாம் ப்ளண்டெல், ட்ரெண்ட் போல்ட், கொலின் டி கிராண்ட்ஹோம், லாக்கி பெர்குசன், மார்ட்டின் குப்டில், மாட் ஹென்றி, டாம் லாதம், கொலின் முன்ரோ, ஜிம்மி நீஷாம், ஹென்றி நிக்கோல்ஸ், மிட்செல் சாண்ட்னர், இஷ் சோதி, டிம் சவுதி, ரோஸ் டெய்லர்.

இங்கிலாந்து: இயன் மோர்கன் (கேப்டன்), மொயீன் அலி, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜானி பேர்ஸ்டோவ், ஜோஸ் பட்லர், டாம் குர்ரான், லியாம் டாசன், லியாம் பிளங்கெட், ஆதில் ரஷீத், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் வின்ஸ், கிறிஸ் வோக்ஸ், மார்க்வுட்.

Trending News