டெல்லி/இங்கிலாந்து: கிரிக்கெட் உலக கோப்பை தொடரின் நேற்று நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நாட்டிங்காம்மில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சு தேர்வு செய்ததால், இதனையடுத்து பாகிஸ்தான் அணி முதலில் களம் கண்டது.
ஏற்கனவே இங்கிலாந்தில் நடைபெற்ற பயிற்ச்சி ஆட்டத்திலும் உலக கோப்பை தொடரின் முதல் ஆட்டத்திலும் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது. இதனால் நேற்று நடைபெற்ற போட்டி பாகிஸ்தானுக்கு முக்கியமானதாக இருந்தது.
நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி வீரர்கள் அனைவரும் நன்றாக செயல்பட்டு அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். முதல் ஐந்து வீரர்கள் தங்கள் பங்களிப்பை சரியாக செய்ததால் பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 348 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ் தலா 3 விக்கெட்டுகளையும், மார்க் வுட் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
பின்னர் 349 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்ட இங்கிலாந்து அணி தொடக்க வீரர்கள் ஏமாற்றம் அளித்தனர். ஜோ ரூட் மற்றும் ஜோஸ் பட்லர் தவிர மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. ஜோ ரூட்107(104) நிதானமாகவும், ஜோஸ் பட்லர் 103(76) அதிரடியாகவும் விளையாடி இருவரும் சதத்தை பூர்த்தி செய்தனர். இவர்களின் சதத்தால் இங்கிலாந்து அணி வெற்றியின் அருகில் சென்றது. ஆனால் அடுத்தடுத்து விக்கெட் பறிகொடுத்ததாலும், யாரும் சரியாக நிலைத்து ஆடாததாலும் இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு வெறும் 334 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 14 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
இந்த வெற்றி மூலம் பாகிஸ்தான் அணி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஆம், இதுவரை 11 ஒரு நாள் போட்டியில் தொடந்து தோல்வி அடைந்து வந்தது பாகிஸ்தான். ஆனால் நேற்றை போட்டியில் அணியின் வீரர்கள் ஒன்றாக இணைந்து செயல்பட்டதால், வெற்றி சாத்தியமானது என்பது குறிப்பிடத்தக்கது.
11 ODI losses in a row, comprehensively beaten in their opening #CWC19 encounter, Pakistan bounce back with a brilliant win over England at Trent Bridge.
They have beaten the hosts – and tournament favourites – by 14 runs! pic.twitter.com/Pmz5Am6YdE
— Cricket World Cup (@cricketworldcup) June 3, 2019