புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக செவ்வாய்க்கிழமை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும், ICC வாரியம் வியாழக்கிழமை (மே 28) இந்த விஷயத்தைப் பற்றி மேலும் விவாதிக்கும் என்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் ICC., "ICC-யின் அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான செயல்முறை குறித்து விவாதிக்க ICC வாரியம் நேற்று கூடியது. தேர்தல் செயல்முறை குறித்து இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை, மேலும் அடுத்த ICC வாரிய கூட்டத்தில் இந்த விடயம் குறித்து விவாதிக்கப்படும்" என தெரிவித்துள்ளது.
ICC மேலும் கூறுகையில், தற்போதுள்ள தலைவர் தனது பதவிக்காலத்திற்கு எந்த நீட்டிப்பையும் கோரவில்லை, ஆனால் ஒரு சுமுகமான மாற்றத்தை உறுதிப்படுத்த வாரியத்தை ஆதரிப்பார் என குறிப்பிட்டுள்ளது.
தற்போது பதவியில் இருக்கும் ICC தலைவர் சஷாங்க் மனோகர் இரண்டு ஆண்டு காலத்திற்கு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார், ஆனால் தனிப்பட்ட காரணங்களுக்காக 2017 மார்ச் மாதம் ராஜினாமா செய்தார். 2018-ஆம் ஆண்டில் இரண்டாவது இரண்டு ஆண்டு காலத்திற்கு போட்டியின்றி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் (ECB) தலைவர் கொலின் கிரேவ்ஸ் இந்த பதவியை நிரப்ப சிறந்த போட்டியாளர் என்று ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. BCCI தலைவர் சவுரவ் கங்குலியின் பெயரும் சமூக ஊடக தளங்களில் சுற்றுகளை உருவாக்கியுள்ளது.